/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ ஓரிக்கை திரவுபதியம்மன் கோவிலில் மஹாபாரத நாடகம் நாளை துவக்கம் ஓரிக்கை திரவுபதியம்மன் கோவிலில் மஹாபாரத நாடகம் நாளை துவக்கம்
ஓரிக்கை திரவுபதியம்மன் கோவிலில் மஹாபாரத நாடகம் நாளை துவக்கம்
ஓரிக்கை திரவுபதியம்மன் கோவிலில் மஹாபாரத நாடகம் நாளை துவக்கம்
ஓரிக்கை திரவுபதியம்மன் கோவிலில் மஹாபாரத நாடகம் நாளை துவக்கம்
ADDED : மே 13, 2025 08:34 PM
ஓரிக்கை:காஞ்சிபுரம் மாநகராட்சி, ஓரிக்கையில் திரவுபதியம்மன் கோவிலில் அக்னி வசந்த மஹாபாரத பெருவிழா, கடந்த 7ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவையொட்டி மதியம் 2:00 மணி முதல், மாலை 5:30 மணி வரை, ரத்தின தனஞ்செயன், வரும் 26ம் தேதி வரை மஹாபாரத சொற்பொழிவாற்றுகிறார். ராஜநிதி இன்னிசை நிகழ்த்துகிறார்.
விழாவின் மற்றொரு நிகழ்வாக நாளை முதல் தினமும், இரவு 10:00 மணிக்கு திருவண்ணாமலை மாவட்டம், செய்யார் வட்டம், குண்டையார்தண்டலம் ஸ்ரீமாரியம்மன் தெருக்கூத்து நாடக சபாவின், மஹாபாரத நாடகம், 10 நாட்களுக்கு நடக்கிறது.
இதில், முக்கிய நிகழ்வாக, வரும் 19ம் தேதி அர்ச்சுனன் தபசு மரம் ஏறும் நிகழ்ச்சியும், 25ம் தேதி காலை துரியோதனன் படுகளமும், மாலை தீமிதி திருவிழாவும் விமரிசையாக நடக்கிறது.
வரும் 26ம் தேதி, தருமர் பட்டாபிஷேகத்துடன் அக்னி வசந்த மஹாபாரத பெருவிழா நிறைவு பெறுகிறது.