/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ மாயமான காவலாளி ஏரி கால்வாயில் சடலமாக மீட்பு மாயமான காவலாளி ஏரி கால்வாயில் சடலமாக மீட்பு
மாயமான காவலாளி ஏரி கால்வாயில் சடலமாக மீட்பு
மாயமான காவலாளி ஏரி கால்வாயில் சடலமாக மீட்பு
மாயமான காவலாளி ஏரி கால்வாயில் சடலமாக மீட்பு
ADDED : அக் 09, 2025 11:15 PM

உத்திரமேரூர்:மாயமான தனியார் தொழிற்சாலை காவலாளி, காட்டுகொல்லை நாஞ்சிபுரம் ஏரி கால்வாயில் சடலமாக மீட்கப்பட்டார்.
உத்திரமேரூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட, காட்டுகொல்லை கிராமத்தை சேர்ந்தவர் தேவேந்திரன், 48; தனியார் தொழிற்சாலை காவலாளி. இவர் நேற்று முன்தினம் காலை வழக்கம்போல, சாத்தமை பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலைக்கு வேலைக்கு சென்றார்.
வேலை முடிந்து இரவு 8:00 மணிக்கு வீட்டிற்கு வரவேண்டியவர், இரவு 9:00 மணி ஆகியும் வீடு திரும்பவில்லை. இதனால், குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் அவரை தேடினர்.
இந்நிலையில், தேவேந்திரன் காட்டுகொல்லை கிராமத்தில், பாப்பநல்லுார் செல்லும் சாலையோரம் உள்ள, நாஞ்சிபுரம் ஏரி கால்வாயில், இரவு 9:30 மணிக்கு, இறந்த நிலையில் மீட்கப்பட்டார்.
உத்திரமேரூர் போலீசார் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக, செங்கல்பட்டு அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சம்பவம் குறித்து, உத்திரமேரூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


