/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ காரப்பேட்டையில் ஆபத்தான முறையில் சாலையை கடக்கும் வாகன ஓட்டிகள் காரப்பேட்டையில் ஆபத்தான முறையில் சாலையை கடக்கும் வாகன ஓட்டிகள்
காரப்பேட்டையில் ஆபத்தான முறையில் சாலையை கடக்கும் வாகன ஓட்டிகள்
காரப்பேட்டையில் ஆபத்தான முறையில் சாலையை கடக்கும் வாகன ஓட்டிகள்
காரப்பேட்டையில் ஆபத்தான முறையில் சாலையை கடக்கும் வாகன ஓட்டிகள்
ADDED : மார் 17, 2025 12:53 AM

காரப்பேட்டை:சென்னை - பெங்களூரு இடையே, 654 கோடி ரூபாய் செலவில், நான்குவழிச் சாலையில் இருந்து, ஆறுவழிச் சாலையாக விரிவுபடுத்தும் பணி நடந்து வருகிறது.
ராஜகுளம், ஏனாத்துார், பொன்னேரிக்கரை, கீழம்பி, ஆரியபெரும்பாக்கம், பாலுச்செட்டிசத்திரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மேம்பாலம் கட்டுமிடங்களில், வாகனங்கள் செல்வதற்கு ஏற்ப மாற்றுப்பாதை அமைக்கப்பட்டு உள்ளன.
இருப்பினும், சில வாகன ஓட்டிகள் அபாயகரமான பகுதிகளில், சாலை கடந்து செல்கின்றனர். குறிப்பாக, காரப்பேட்டை மேம்பாலம், திருப்புட்குழி, பாலுச்செட்டிசத்திரம், தாமல் ஆகிய கடவுப்பாதைகளில், ஆபத்தான முறையில் வாகனங்களை ஓட்டி செல்கின்றனர்.
இதனால், சென்னை- - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், அதிவேகத்தில் செல்லும் வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.
எனவே, சாலை விரிவாக்கம் பகுதிகளில் செல்லும் வாகனங்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.