/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ மண் அரிப்பால் சாலையோரம் பள்ளம் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள் மண் அரிப்பால் சாலையோரம் பள்ளம் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
மண் அரிப்பால் சாலையோரம் பள்ளம் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
மண் அரிப்பால் சாலையோரம் பள்ளம் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
மண் அரிப்பால் சாலையோரம் பள்ளம் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
ADDED : செப் 24, 2025 02:39 AM

திருப்பருத்திகுன்றம்:சமீபத்தில் பெய்த மழைக்கு, மண் அரிப்பால் திருப்பருத்திகுன்றம் சாலையோரம் ஏற்பட்டுள்ள பள்ளத்தை சீரமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
காஞ்சிபுரம் - வந்தவாசி சாலை, கலெக்ட்ரேட் அருகில் இருந்து, கீழ்கதிர்பூர், மேல்கதிர்பூர், விஷார், குண்டுகுளம், விப்பேடு உள்ளிட்ட பகுதிக்கு திருப்பருத்திகுன்றம் பிரதான சாலை வழியாக சென்று வருகின்றனர்.
வாகன போக்கு வரத்து நிறைந்த இச்சாலையில், சமீபத்தில் காஞ்சிபுரத்தில் சில நாட்களாக பெய்த மழையின் காரணமாக மண் அரிப்பு ஏற்பட்டு சாலையோரம் பள்ளம் ஏற்பட்டுள்ளது.
இதனால், பள்ளம் இருப்பது தெரியாமல் சாலையோரம் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் பள்ளத்தில் விழுந்து விபத்தில் சிக்குகின்றனர்.
எனவே, திருப்பருத்திகுன்றம் பிரதான சாலையோரம் மண் அரிப்பால் ஏற்பட்டுள்ள பள்ளத்தை, நெடுஞ்சாலைத் துறையினர் மண் கொட்டி சீரமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வருகின்றனர்.