/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/சாலையோரத்தில் குப்பை கொட்டி எரிப்பதால் வாகன ஓட்டிகள் அவதிசாலையோரத்தில் குப்பை கொட்டி எரிப்பதால் வாகன ஓட்டிகள் அவதி
சாலையோரத்தில் குப்பை கொட்டி எரிப்பதால் வாகன ஓட்டிகள் அவதி
சாலையோரத்தில் குப்பை கொட்டி எரிப்பதால் வாகன ஓட்டிகள் அவதி
சாலையோரத்தில் குப்பை கொட்டி எரிப்பதால் வாகன ஓட்டிகள் அவதி
ADDED : மார் 28, 2025 01:26 AM

உத்திரமேரூர்:உத்திரமேரூர் பேரூராட்சியில், காஞ்சிபுரம் செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையை பயன்படுத்தி, 1,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் காஞ்சிபுரம், வாலாஜாபாத், திருப்புலிவனம் ஆகிய பகுதிகளுக்கு தினமும் சென்று வருகின்றனர்.
இந்நிலையில், காஞ்சிபுரம் சாலையில் உள்ள குப்பையை, பேரூராட்சி தூய்மை பணியாளர்கள் தினமும் சேகரித்து வருகின்றனர். அவ்வாறு சேகரிக்கும் குப்பையை அருகிலுள்ள சேகரிப்பு கிடங்கிற்கு எடுத்து செல்லாமல், அங்குள்ள பாலத்தின் அருகே கொட்டி தீயிட்டு எரித்து வருகின்றனர்.
சாலையோரத்தில் குப்பையை கொட்டி எரிப்பதால், அப்பகுதியில் எப்போதும் புகை சுழ்ந்து காணப்படுகிறது. இதனால், அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகளுக்கு கண் எரிச்சல் ஏற்பட்டு வருகிறது.
சில நேரங்களில் புகை அதிகமாக காணப்படுவதால், வாகன ஓட்டிகள் நிலைத் தடுமாறி விபத்தில் சிக்கியும் வருகின்றனர். சாலையோரத்தில் குப்பை கொட்டி எரிப்பவர்கள் மீது, பேரூராட்சி நிர்வாகத்தினர், நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்த்து வருகின்றனர்.
எனவே, சாலையோரத்தில் குப்பை கொட்டி எரிப்போர் மீது, நடவடிக்கை எடுக்க, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.