/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ மழையால் மண் அள்ளும் பணி முடக்கம் தேசிய நெடுஞ்சாலை பணி சுணக்கம் மழையால் மண் அள்ளும் பணி முடக்கம் தேசிய நெடுஞ்சாலை பணி சுணக்கம்
மழையால் மண் அள்ளும் பணி முடக்கம் தேசிய நெடுஞ்சாலை பணி சுணக்கம்
மழையால் மண் அள்ளும் பணி முடக்கம் தேசிய நெடுஞ்சாலை பணி சுணக்கம்
மழையால் மண் அள்ளும் பணி முடக்கம் தேசிய நெடுஞ்சாலை பணி சுணக்கம்
ADDED : செப் 25, 2025 12:48 AM

காஞ்சிபுரம்:தினசரி பெய்து வரும் மழையால், ஏரியில் மண் அள்ளும் பணி முடங்கிஉள்ளது. இதனால், தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணிகள் சுணக்கம் ஏற்படும் அபாயம் உள்ளது.
சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலைத் துறை கட்டுப்பாட்டில், நான்குவழி சாலை உள்ளது. இச்சாலை, ஆறுவழி சாலையாக விரிவுபடுத்தும் பணி நடந்து வருகிறது.
இதில், ஆரியபெரும்பாக்கம், கீழம்பி மேம்பால பணிகளுக்கு, கீழம்பி ஏரி மண் எடுத்து பயன்படுத்தி மேம்பாலங்கள் கட்டும் பணியை நிறைவு செய்துள்ளனர்.
தற்போது, பொன்னேரிக்கரை, ஏனாத்துார், வேடல் ஆகிய மேம்பாலம் கட்டும் பணி துவக்கப்பட்டுள்ளன.
இந்த பாலப் பணிகளுக்கு மண்ணை நிரப்புவதற்கு, ஆண்டி சிறுவள்ளூர் ஏரியில் உள்ள மண்ணை எடுத்து வந்து, மேம்பாலம் உயர்த்தும் பணியை தேசிய நெடுஞ்சாலைத் துறையினர் செய்து வருகின்றனர்.
சில தினங்களாக, தினசரி மழை பெய்து வருவதால், ஏரிக்குள் மண் எடுக்க இயலாத நிலை உள்ளது.
இதனால், சென்னை - -பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை போடும் பணியில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே, நீண்ட இழுபறிக்கு பின் சாலை பணி துவங்கிய நிலையில், மீண்டும் சுணக்கம் ஏற்பட்டிருப்பது வாகன ஓட்டிகள் இடையே புலம்பலை ஏற்படுத்தி உள்ளது.
இருப்பினும், மழைக்கு பின், மீண்டும் மண் அள்ளும் பணியை துவக்கி சாலை போடும் பணி துாரிதப்படுத்தப்படும் என, ஒப்பந்த நிறுவன ஊழியர்கள் தெரிவித்தனர்.