ADDED : மார் 25, 2025 06:19 PM
உத்திரமேரூர்:கடலூர் மாவட்டம், விருத்தாசலம் பகுதியில் இருந்து, நெல் மூட்டைகளை ஏற்றிக் கொண்டு, நேற்று, அதிகாலை 1:40 மணியளவில் லாரி ஒன்று வந்தவாசி --- காஞ்சிபுரம் நெடுஞ்சாலையில், காஞ்சிபுரம் நோக்கி சென்று கொண்டு இருந்தது.
லாரியை விருத்தாசலம் பகுதியைச் சேர்ந்த கொளஞ்சி, 55, என்பவர், ஓட்டிச் சென்றார். அப்போது, பெருநகர் பூமாசெட்டிகுளம் அருகே லாரி சென்றபோது, எதிரே வந்த லாரி மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில், வந்தவாசியை நோக்கி சென்ற, லாரியின் ஓட்டுநரான ஆரணி தேவிகாபுரத்தைச் சேர்ந்த கார்த்திகேயன், 45,; என்பவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
பெருநகர் போலீசார், கார்த்திகேயன் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பெருநகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.