/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ஸ்கூட்டி மீது மோதிய கன்டெய்னர் இரட்டையரில் ஒருவர் உயிரிழப்புஸ்கூட்டி மீது மோதிய கன்டெய்னர் இரட்டையரில் ஒருவர் உயிரிழப்பு
ஸ்கூட்டி மீது மோதிய கன்டெய்னர் இரட்டையரில் ஒருவர் உயிரிழப்பு
ஸ்கூட்டி மீது மோதிய கன்டெய்னர் இரட்டையரில் ஒருவர் உயிரிழப்பு
ஸ்கூட்டி மீது மோதிய கன்டெய்னர் இரட்டையரில் ஒருவர் உயிரிழப்பு
ADDED : பிப் 25, 2024 02:24 AM
சென்னை, மதுரவாயல், பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஜீவா, 24. இவரது சகோதரர் சதீஷ், 24; இரட்டை சகோதரர்களான இருவரும், ஆந்திராவில் சட்டப்படிப்பு படித்து வந்தனர்.
இவர்களது நண்பர் ஷாம் சுந்தர், 20. தனியார் கல்லுாரியில் பொறியியல் படித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு, மூன்று பேரும் ஒரே ஸ்கூட்டியில் கோயம்பேடு சென்று வீடு திரும்பினர்.
மதுரவாயல் - பூந்தமல்லி நெடுஞ்சாலையில், வீட்டின் அருகே சாலையில் திரும்பியபோது, கோயம்பேடு நோக்கி வந்த கன்டெய்னர் லாரி ஸ்கூட்டி மீது மோதியது.
இதில், மூன்று பேரும் துாக்கி வீசப்பட்டனர். ஜீவா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சதீஷ் மற்றும் ஷாம் சுந்தர் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இருவரும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தகவல் அறிந்து வந்த கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வு போலீசார், ஜீவாவின் உடலை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்துக்கு காரணமான கன்டெய்னர் லாரி டிரைவர் அசத் அன்சாரி என்பவரை கைது செய்தனர்.