/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ கொசு அதிகரிப்பால் மேல்பொடவூர் மக்கள் அவதி கொசு அதிகரிப்பால் மேல்பொடவூர் மக்கள் அவதி
கொசு அதிகரிப்பால் மேல்பொடவூர் மக்கள் அவதி
கொசு அதிகரிப்பால் மேல்பொடவூர் மக்கள் அவதி
கொசு அதிகரிப்பால் மேல்பொடவூர் மக்கள் அவதி
ADDED : செப் 12, 2025 02:33 AM

வாலாஜாபாத்:மேல்பொடவூரில், கொசு அதிகரிப்பை கட்டுப்படுத்த கொசு அழிப்பு புகை அடிக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வாலாஜாபாத் ஒன்றியத்திற்கு உட்பட்டது மேல்பொடவூர் கிராமம். இக்கிராமத்தில், ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதியில் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கன்றனர்.
இப்பகுதி தெருவையொட்டி மழைநீர் வடிகால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. இக்கால்வாய் போதிய பராமரிப்பு இல்லாததால், கழிவுகள் அடைப்பு ஏற்பட்டும், தேக்கமாகியும் காணப்படுகிறது.
மேலும், பல வீடுகளை சுற்றி புதர்கள் அடரந்துள்ளது. இதனால், கொசு உற்பத்தி அதிகரித்து இரவு மட்டுமின்றி பகல் நேரங்களிலும் அப்பகுதியினர் அவதிபடுகின்றனர். சில ஆண்டுகளாகவே இப்பிரச்னை இங்கு தொடர்ந்து உள்ளது.
இரவு நேரத்தில் ஒவ்வொரு வீட்டு வாசலிலும் நொச்சிலி தழை உள்ளிட்டவை எரித்து புகை மூட்டி கொசுவை கட்டுப்படுத்தும் முயற்சி மேற்கொள்கின்றனர். எனினும், கொசு தொல்லையால் குழந்தைகள் முதல் பெரியோர் வரை தினமும் அவதிபடுகின்றனர்.
எனவே, மேல்பொடவூர் ஊராட்சியில் கொசு அதிகரிப்பை கட்டுப்படுத்த கொசு அழிப்பு புகை அடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.