/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ மாணவர்களுக்கு காய்கறி விதை வழங்கல் மாணவர்களுக்கு காய்கறி விதை வழங்கல்
மாணவர்களுக்கு காய்கறி விதை வழங்கல்
மாணவர்களுக்கு காய்கறி விதை வழங்கல்
மாணவர்களுக்கு காய்கறி விதை வழங்கல்
ADDED : மார் 27, 2025 10:28 PM
கீழ்கதிர்பூர்:பள்ளி மாணவ - மாணவியருக்கு வீட்டுதோட்டத்திலேயே சாகுபடி செய்யும் வகையில், பாரம்பரிய காய்கறி விதைகள் வழங்கும் விழா காஞ்சிபுரம் அடுத்த, கீழ்கதிர்பூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நேற்று நடந்தது.
இதில், இயற்கை விவசாயி கோகுல், மாணவர்களுக்கு ரசாயண உரம் இல்லாமல், பாரம்பரிய முறையில் சமையலுக்கு தேவையான காய்கறிகளை வீட்டு தோட்டத்தில் சாகுபடி செய்யும் முறை குறித்து விளக்கம் அளித்தார். இயற்கை உரம் பயன்படுத்திய காய்கறி மற்றும் கீரை விதையை வழங்கினார்.