/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ வடிகால்வாயில் செடிகள் வளர்ந்துள்ளதால் மழைநீர் வெளியேறுவதில் சிக்கல் வடிகால்வாயில் செடிகள் வளர்ந்துள்ளதால் மழைநீர் வெளியேறுவதில் சிக்கல்
வடிகால்வாயில் செடிகள் வளர்ந்துள்ளதால் மழைநீர் வெளியேறுவதில் சிக்கல்
வடிகால்வாயில் செடிகள் வளர்ந்துள்ளதால் மழைநீர் வெளியேறுவதில் சிக்கல்
வடிகால்வாயில் செடிகள் வளர்ந்துள்ளதால் மழைநீர் வெளியேறுவதில் சிக்கல்
ADDED : செப் 24, 2025 02:47 AM

கீழ்கதிர்பூர்:வேகவதி ஆற்றுக்கு மழைநீர் செல்லும் வடிகால்வாயில் செடிகள் வளர்ந்து, மழைநீர் வெளியேறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால், அவற்றை துார்வாரி சீரமைக்க வேண்டும் என, கீழ்கதிர்பூர் விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
காஞ்சிபுரம் ஒன்றியம், குண்டுகுளம், மேல்கதிர்பூர், கீழ்கதிர்பூர் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள விவசாய நிலங்களில் பெய்யும் மழைநீர், வேகவதி ஆற்றுக்கு செல்லும் வகையில் வடிகால்வாய் அமைக்கப்பட்டுள்ளது.
இக்கால்வாய், செடிகள் வளர்ந்து துார்ந்த நிலையில் உள்ளது. இதனால், மழைபெய்யும்போது, கால்வாய் வாயிலாக வேகவதி ஆற்றுக்கு செல்லும் மழைநீர், கீழ்கதிர்பூரில் உள்ள விவசாய நிலங்களில் புகுந்து, நெல் நாற்று நடவு செய்துள்ள விளை நிலங்களில் மழைநீர் தேங்கி மூழ்கி விடுகின்றன.
இதனால், ஆண்டுதோறும் பருவமழையின்போது விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகிறது.
எனவே, வடகிழக்கு பருவமழை துவங்குவதற்குள், வேகவதி ஆற்றுக்கு மழைநீர் செல்லும் வடிகால்வாயை முழுமையாக துார்வாரி சீரமைக்க, மாவட்ட நிர்வாகம் எடுக்க வேண்டும் என, கீழ்கதிர்பூர் விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.