/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ தம்மனுார் ஏரியில் சேதமடைந்த மதகு, கால்வாய் கரைகள் சீரமைப்பு தம்மனுார் ஏரியில் சேதமடைந்த மதகு, கால்வாய் கரைகள் சீரமைப்பு
தம்மனுார் ஏரியில் சேதமடைந்த மதகு, கால்வாய் கரைகள் சீரமைப்பு
தம்மனுார் ஏரியில் சேதமடைந்த மதகு, கால்வாய் கரைகள் சீரமைப்பு
தம்மனுார் ஏரியில் சேதமடைந்த மதகு, கால்வாய் கரைகள் சீரமைப்பு
ADDED : டிச 04, 2025 04:20 AM

வாலாஜாபாத்: தம்மனுார் ஏரிக்கு நீர்வரத்து துவங்கி உள்ளதை அடுத்து, ஏரியில் சேதமடைந்த மதகு மற்றும் பலவீனமா ன கரைப்பகுதிகளை ஊராட்சி நிர்வாகம் மற்றும் அப்பகுதி விவசாயிகள் இணைந்து சீரமைப்பு பணி மேற்கொண்டனர்.
வாலாஜாபாத் வட்டாரத்திற்கு உட்பட்ட தம்மனுார் கிராமத்தில், நீர்வளத்துறை கட்டுப்பாட்டின் கீழ், பூதேரி மற்றும் கடப்பேரி ஆகிய இரண்டு ஏரிகள் உள்ளன.
பருவ ம ழைக்காலத்தில் இந்த ஏரிகள் முழுமையாக நிரம்பினால், அத்தண்ணீரைக் கொண்டு அப்பகுதியில் உள்ள 900 ஏக்கர் பரப்பிலான விவசாய நிலங்கள் பாசனம் பெறுகின்றன.
எனினும், த ம்மனுார் ஏரிகளுக்கு போதுமான நீர்வரத்து ஆதாரம் இல்லாததால் நடப்பாண்டில் பருவ மழை துவங்கி ஒரு மாதமாக ஏரிக்கு நீர்வரத்து துவங்காமல் இருந்தது.
இதனால், அப்பகுதி விவசாயிகள் கவலையில் இருந்தனர்.
இந்நிலையில், மூன்று நாட்களாக பெய்த கனமழை காரணமாக அவளூர் ஏரியின் உபரி நீர் மற்றும் சுற்றியுள்ள நீர்நிலைகளில் இருந்து வெளியேறும் தண்ணீர் தம்மனுார் ஏரிக்கு சென்றடைகிறது.
இதனால், தம்மனுார் கடப்பேரி மற்றும் பூதேரிக்கு நீர்வரத்து துவங்கி உள்ளது.
இதையடுத்து, தம்மனுார் ஊராட்சி நிர்வாகம் மற்றும் அப்பகுதி விவசாயிகள் சார்பில் நேற்று ஏரிக்கான பல்வேறு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
ஏரி மதகுகளில் தண்ணீர் வெளியேறாமல் தடுத் தல், பலவீனமான கரை பகுதிகளில் மண் கொட்டி சீரமைத்தல், உபரீநீர் வெளி யேறும் பகுதி, வரத்து கால்வாய் கரைகள் சீரமைத்தல் உ ள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டன.


