/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ வைப்பூரில் வடிகால்வாய் அமைக்க கோரிக்கை வைப்பூரில் வடிகால்வாய் அமைக்க கோரிக்கை
வைப்பூரில் வடிகால்வாய் அமைக்க கோரிக்கை
வைப்பூரில் வடிகால்வாய் அமைக்க கோரிக்கை
வைப்பூரில் வடிகால்வாய் அமைக்க கோரிக்கை
ADDED : மே 13, 2025 01:02 AM

ஸ்ரீபெரும்புதுார் :குன்றத்துார் ஒன்றியத்திற்குட்பட்ட வைப்பூர் கிராமம் மேட்டுத் தெருவில் 30க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. மேட்டுத்தெரு பிரதான சாலையோரம் இதுவரை வடிகால்வாய் வசதி ஏற்படுத்தபடாமல், சாலையோரம் திறந்தவெளி கால்வாயில் மழைநீர் மற்றும் வீட்டு உபயோக கழிவுநீர் வெளியேறி வருகிறது.
இதனால், மழை நேரங்களில் வெள்ளநீர், கழிவுநீருடன் கலந்து சாலையில் வழிந்து வருகிறது. அதே சமயம், சாலையோரம் உள்ள குடியிருப்புகளை வெள்ள நீர் புகுந்து பாதிக்கும் சூழல் உள்ளது.
மேலும், கால்வாயில் தேங்கும் வீட்டு உபயோக கழிவுநீரால், கொசு உற்பத்தி உள்ளிட்ட பிரச்னை ஏற்படுகின்றன.
எனவே, வைப்பூர் மேட்டு தெரு பிரதான சாலையோரம் வடிகால்வாய் வசதி ஏற்படுத்த ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.