/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ களியாம்பூண்டி சாலையில் மின்விளக்கு அமைக்க கோரிக்கை களியாம்பூண்டி சாலையில் மின்விளக்கு அமைக்க கோரிக்கை
களியாம்பூண்டி சாலையில் மின்விளக்கு அமைக்க கோரிக்கை
களியாம்பூண்டி சாலையில் மின்விளக்கு அமைக்க கோரிக்கை
களியாம்பூண்டி சாலையில் மின்விளக்கு அமைக்க கோரிக்கை
ADDED : செப் 12, 2025 09:16 PM
உத்திரமேரூர்:களியாம்பூண்டி சாலை யில் மின்விளக்கு அமைக்க, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உத்திரமேரூர் - மானாம்பதி நெடுஞ்சாலை, காரணிமண்டபம் பகுதியில் இருந்து பிரிந்து களியாம்பூண்டி செல்லும் சாலை உள்ளது.
குக்கிராமமான களியாம்பூண்டியில் இருந்து காரணிமண்டபத்திற்கு, கிராம மக்கள் நடந்தும், இருசக்கர வாகனத்திலும் சென்று வருகின்றனர். அங்கிருந்து, தனியார் தொழிற்சாலை உள்ளிட்ட இடங்களுக்கு பேருந்துகள் மூலம் செல்கின்றனர்.
பணி முடித்து இரவு நேரம் வீடு திரும்பும்போது, களியாம்பூண்டி செல்லும் 1 கி.மீ., சாலையில் மின் விளக்குகள் இல்லாததால், இருள் சூழ்ந்து காணப்படுகிறது.
இ தனால், வேலை மற்றும் வெளியூர்களுக்கு சென்று இரவு நேரங்களில் வீடு திரும்புவோர், அச்சத்தோடு செல்கின்றனர். களியாம்பூண்டி சாலையில் மின் விளக்குகள் அமைக்க, ஊரக வளர்ச்சி துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.