/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ கச்சிப்பட்டு பொது குட்டையை மீட்டெடுக்க கோரிக்கை கச்சிப்பட்டு பொது குட்டையை மீட்டெடுக்க கோரிக்கை
கச்சிப்பட்டு பொது குட்டையை மீட்டெடுக்க கோரிக்கை
கச்சிப்பட்டு பொது குட்டையை மீட்டெடுக்க கோரிக்கை
கச்சிப்பட்டு பொது குட்டையை மீட்டெடுக்க கோரிக்கை
ADDED : செப் 25, 2025 12:44 AM

ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் கச்சிப்பட்டு பகுதியில் ஆக்கிரமிப்பு மற்றும் கழிவுகளால் துார்ந்து வரும், பொது குட்டையை மீட்டெடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
ஸ்ரீ பெரும்புதுார் கச்சிப்பட்டு, நடுத்தெரு பகுதியில், நகராட்சிக்கு சொந்தமான பொது குட்டை உள்ளது. 20 ஆண்டுகளுக்கு முன், இக்குட்டை அப்பகுதியின் முக்கி ய நிலத்தடி ஆதாரமாக விளங்கி வந்தது.
அப்பகுதி மக்கள் குளிக்கவும், வீட்டு உபயோக பயன்பாட்டிற்கும் இந்த குட்டையின் நீரை பயன் படுத்தி வந்தனர்.
தற்போது, பராமரிப்பு இல்லாத குட்டை, இருந்த இடமே தெரியாத அளவிற்கு துார்ந்து உள்ளது. அருகே குடியிருப்பவர்கள் கொஞ்சம், கொஞ்சமாக குட்டை கரையை ஆக்கிரமித்து வருகின்றனர்.
அதே போல, நீர்வரத்து கால் வாயும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதால், மழை பொழிவு இருந்தும், குட்டையில் நீர் தேக்கம் அடையாமல் உள்ளது. மேலும், மாட்டுசானம், பிளாஸ்டிக் உள்ளிட்ட இதர குப்பையை குட்டையில் கொட்டி வருகின்றனர்.
இதனால், தண்ணீர் சேமிக்க வேண்டிய குட்டையில், குப்பை மற்றும் கழிவுகள் குவிந்து வருகின்றன.
எனவே, அழிவின் விளிம்பில் உள்ள கச்சிப்பட்டு பொது குட்டையை துார்வாரி மீட்டெடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.