/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ சாலையில் தேங்கும் நீரால் நோய் பரவும் அபாயம் சாலையில் தேங்கும் நீரால் நோய் பரவும் அபாயம்
சாலையில் தேங்கும் நீரால் நோய் பரவும் அபாயம்
சாலையில் தேங்கும் நீரால் நோய் பரவும் அபாயம்
சாலையில் தேங்கும் நீரால் நோய் பரவும் அபாயம்
ADDED : மே 11, 2025 11:43 PM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அடுத்த, திம்மையன்பேட்டை ஊராட்சியில், கருக்குப்பேட்டை கிராமத்தில், அங்கன்வாடி மையம் இயங்கி வருகிறது.
இந்த அங்கன்வாடி மையம் அருகே, கருக்குப்பேட்டை காசி விஸ்வநாதர் கோவிலுக்கு செல்லும் சாலை மற்றும் பெண்டை கிராமத்திற்கு செல்லும் சாலை உள்ளது.
இந்த சாலை வழியாக கருக்குப்பேட்டை மக்கள், பெண்டை, வில்லிவலம், ஏகனாம்பேட்டை, நாயக்கன்பேட்டை ஆகிய கிராமங்களுக்கு சென்று வருகின்றனர்.
இந்த அங்கன்வாடி மையம் அருகே, தனியாருக்கு சொந்தமான வீடு கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன.
அவர்கள் பிடிக்கும் தண்ணீர் சாலையின் நடுவே தண்ணீர் குளம் போல தேங்கி நிற்கிறது. அந்த சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் நடத்து செல்வோருக்கு முகம் சுளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும், அங்கன்வாடி மையம் அருகே தண்ணீர் தேங்குவதால், கழிவுநீராக மாறி நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே, சாலையில் தேங்கும் தண்ணீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.