/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ பஸ் நிலைய கட்டடத்தில் வளர்ந்துள்ள அரச மரச்செடிகள் பஸ் நிலைய கட்டடத்தில் வளர்ந்துள்ள அரச மரச்செடிகள்
பஸ் நிலைய கட்டடத்தில் வளர்ந்துள்ள அரச மரச்செடிகள்
பஸ் நிலைய கட்டடத்தில் வளர்ந்துள்ள அரச மரச்செடிகள்
பஸ் நிலைய கட்டடத்தில் வளர்ந்துள்ள அரச மரச்செடிகள்
ADDED : மார் 17, 2025 12:51 AM

உத்திரமேரூர்,:உத்திரமேரூர் பேரூராட்சியில் உள்ள குடவோலை கல்வெட்டு கோவில் அருகே, பேருந்து நிலையம் அமைந்துள்ளது. இங்கிருந்து, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வந்தவாசி, சென்னை, வாலாஜாபாத், செய்யாறு ஆகிய பகுதிகளுக்கு, அரசு மற்றும் தனியார் பேருந்துகள் தினமும் சென்று வருகின்றன.
இந்த பேருந்து நிலையத்திற்கு, 100க்கும் மேற்பட்ட சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து, பயணியர் வந்து செல்கின்றனர். இந்நிலையில், இப்பேருந்து நிலைய கட்டடம் முறையான பராமரிப்பு இல்லாமல் உள்ளது.
கட்டடத்தில் அரச மரச்செடிகள் வளர்ந்து உள்ளன. இதனால், கட்டடத்தின் உறுதித்தன்மை பாதிக்கப்பட்டு, ஆயுட்காலம் முடிவதற்குள் கட்டடம் சேதமடைய வாய்ப்பு உள்ளது.
மேலும், பேருந்து நிலையத்தில் உள்ள இரும்பு கூரையும் சேதமடைந்து, மழை நேரங்களில் மழைநீர் உள்ளே வழிகிறது. எனவே, பேருந்து நிலையத்தை முறையாக பராமரித்து, கட்டடத்தில் வளரும் செடிகளை அகற்ற, பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.