/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ காமாட்சியம்மனை தரிசனம் செய்ய உள்ளூர் பக்தர்களுக்கு தனி வரிசை காமாட்சியம்மனை தரிசனம் செய்ய உள்ளூர் பக்தர்களுக்கு தனி வரிசை
காமாட்சியம்மனை தரிசனம் செய்ய உள்ளூர் பக்தர்களுக்கு தனி வரிசை
காமாட்சியம்மனை தரிசனம் செய்ய உள்ளூர் பக்தர்களுக்கு தனி வரிசை
காமாட்சியம்மனை தரிசனம் செய்ய உள்ளூர் பக்தர்களுக்கு தனி வரிசை
ADDED : செப் 13, 2025 01:00 AM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் காமாட்சி அம்மனை தரிசனம் செய்ய உள்ளூர் பக்தர்களுக்கு தனி வரிசை ஏற்படுத்தப்பட்டுள்ளது என, கோவில் நிர்வாகம் தெரிவித்து உள்ளது.
அம்மனின், 51 சக்தி பீடங்களில், காஞ்சி காமாட்சியம்மன் கோவில், காமகோடி சக்தி பீடமாக விளங்குகிறது. பல்வேறு சிறப்புமிக்க இக்கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
இதில், தமிழ் மாத பிறப்பு, பவுர்ணமி, செவ்வாய், வெள்ளி உள்ளிட்ட விசேஷ நாட்களிலும், அரசு விடுமுறை நாட்களிலும் வழக்கத்தைவிட பல மடங்கு வெளியூர் பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
இதனால், விசேஷம் மற்றும் விடுமுறை நாட்களில், காஞ்சி புரம் காமாட்சியம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்கள், 2- - 3 மணி நேரம் காத்திருந்து அம்மனை தரிசனம் செய்ய வேண்டிய நிலை உள்ளது.
இதனால், வெளியூர் பக்தர்கள் மட்டுமின்றி உள்ளூர் பக்தர்களும், நீண்டநேரம் காத்திருந்து அம்மனை தரிசனம் செய்ய வேண்டிய நிலை உள்ளது.
இதனால், உள்ளூர் பக்தர்களுக்கு தனி வழி ஏற்படுத்த வேண்டும் என, கோரிக்கை எழுந்தது.
இதையடுத்து, காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவில் நிர்வாகம் சார்பில், உள்ளூர் பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்ய தனி வழி ஏற்படுத்தப் பட்டுள்ளது.
இதனால், உள்ளூர் பக்தர்கள் தங்களது ஆதார் கார்டை காண்பித்து உள்ளூர் பக்தர்களுக்கு என, பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ள தனி வரிசையில் சென்று காமாட்சி அம்மனை தரிசிக்கலாம்.
இதுகுறித்து காமாட்சியம்மன் கோவில் ஸ்ரீகார்யம் ந.சுந்தரரேச ஐயர் கூறியதாவது:
உள்ளூர் பக்தர்களின் கோரிக்கையை ஏற்று அம்மனை தரிசிக்க தனி வழி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
உள்ளூர் பக்தர்கள் அம்பாளை தரிசனம் செய்ய தனி வரிசையில் செல்ல விரும்பினால், அவர்களுடைய ஆதார் கார்டை காண்பித்தால், அனுமதிக்கப்படுவர்.
இவ்வாறு அவர் கூறினார்.