/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/பாதாள சாக்கடையில் அடைப்பு தேங்கும் கழிவுநீரால் சீர்கேடுபாதாள சாக்கடையில் அடைப்பு தேங்கும் கழிவுநீரால் சீர்கேடு
பாதாள சாக்கடையில் அடைப்பு தேங்கும் கழிவுநீரால் சீர்கேடு
பாதாள சாக்கடையில் அடைப்பு தேங்கும் கழிவுநீரால் சீர்கேடு
பாதாள சாக்கடையில் அடைப்பு தேங்கும் கழிவுநீரால் சீர்கேடு
ADDED : ஜூன் 20, 2025 02:09 AM

காஞ்சிபுரம்:பெரிய காஞ்சிபுரம், தாமரை பள்ளம் தெருவில், பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு அங்கன்வாடி மையம் அருகில், சாலையோரம் தேங்கும் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது.
காஞ்சிபுரம் மாநகராட்சி 2வது வார்டு சர்வதீர்த்தகுளம் மேலாண்டை கரை, தாமரை பள்ளம் தெருவில் சாலையோரம் கழிவுநீர் செல்லும் தளத்துடன் கான்கிரீட் கால்வாய் உள்ளது.
இக்கால்வாயில் தளத்தில் ஆங்காங்கே உடைப்பு ஏற்பட்டு திறந்து கிடக்கும் கால்வாயில் சென்ற குப்பையால் அடைப்பு ஏற்பட்டு சாலையில் கழிவுநீர் வழிந்தோடுகிறது.
குறிப்பாக அங்கன்வாடி மையம் அருகில் சாலையில் தேங்கும் கழிவுநீரால் அப்பகுதியில் கொசுத் தொல்லை அதிகரித்துள்ளதாக பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
தொடர்ந்து வெளியேறும் கழிவுநீரால் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.
எனவே, தாமரைபள்ளம் தெருவில், கழிவுநீர் கால்வாயில் ஏற்பட்டுள்ள அடைப்பை நீக்கவும், சேதமடைந்த தளத்தை சீரமைக்கவும், மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.