/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ஊராட்சி அலுவலக நுழைவாயிலில் கழிவுநீரால் சுகாதார சீர்கேடுஊராட்சி அலுவலக நுழைவாயிலில் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு
ஊராட்சி அலுவலக நுழைவாயிலில் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு
ஊராட்சி அலுவலக நுழைவாயிலில் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு
ஊராட்சி அலுவலக நுழைவாயிலில் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு
ADDED : பிப் 12, 2024 05:59 AM

சிறுகாவேரிபாக்கம்: காஞ்சிபுரம் ஒன்றியம், சிறுகாவேரிபாக்கம் ஊராட்சி அலுவலகத்தையொட்டி மழைநீர் வடிகால்வாய் உள்ளது. இப்பகுதியில் பாதாள சாக்கடை வசதி இல்லாததால், அப்பகுதியினர் வீட்டு உபயோக கழிவுநீரை மழைநீர் வடிகால்வாயில் விடுகின்றனர்.
இக்கால்வாயை ஊராட்சி நிர்வாகம் முறையாக பராமரிக்காததால், கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு, கழிவுநீரில் பாசிபடர்ந்து வெளியேற வழியின்றி ஒரே இடத்தில் தேங்கியுள்ளது.
இதனால், கழிவுநீரில் கொசுக்கள் உற்பத்தியாகிள்ளதால், சிறுகாவேரிபாக்கத்தில் தொற்றுநோய் ஏற்பட்டு சுகாதார சீர்கேடு ஏற்படும் சூழல் உள்ளது.
எனவே, ஊராட்சி அலுவலகத்தை ஒட்டியுள்ள மழைநீர் வடிகால்வாயில் தேங்கியுள்ள கழிவுநீர் தடையின்றி வெளியேறும் வகையில் கால்வாயை துார்வாரி சீரமைக்க சிறுகாவேரிபாக்கம் ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.