/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/சார்ஜா விமானம் தாமதம்: 3 மணி நேரமாக தவிப்புசார்ஜா விமானம் தாமதம்: 3 மணி நேரமாக தவிப்பு
சார்ஜா விமானம் தாமதம்: 3 மணி நேரமாக தவிப்பு
சார்ஜா விமானம் தாமதம்: 3 மணி நேரமாக தவிப்பு
சார்ஜா விமானம் தாமதம்: 3 மணி நேரமாக தவிப்பு
ADDED : பிப் 11, 2024 12:29 AM
சென்னை:சார்ஜாவில் இருந்து நேற்று முன்தினம் நள்ளிரவு, 142 பயணியருடன் புறப்பட்ட 'ஏர் அரேபியா ஏர்லைன்ஸ்' விமானம், சென்னை நோக்கி வந்துகொண்டிருந்தது.
விமானத்தில் ஏற்பட்ட திடீர் தொழில்நுட்ப கோளாறு காரணமாக, அந்த விமானம், சார்ஜாவுக்கே மீண்டும் அனுப்பப்பட்டது.
அங்கு, கோளாறு சரிசெய்யப்பட்டு நேற்று காலை 6:00 மணிக்கு, சென்னை வந்தது. வழக்கமாக, அதிகாலை 3:00 மணிக்கு சென்னை வரும் ஏர் அரேபியா விமானம், மீண்டும் அதிகாலை 3:40 மணிக்கு, சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து, சார்ஜாவுக்கு புறப்பட்டு செல்லும்.
அந்த வகையில், சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சார்ஜாவுக்கு இந்த விமானத்தில் பயணிக்க, நேற்று முன்தினம் 12:00 மணியில் இருந்து 153 பயணியர் காத்திருந்தனர்.
விமான வருகை தாமதம் காரணமாக, புறப்பாடும் தாமதமானதால், மூன்று மணி நேரம் காத்திருந்து அவதியடைந்த பயணியர், நேற்று காலை 7:00 மணிக்கு புறப்பட்ட ஏர் அரேபியா விமானத்தில் பயணித்தனர்.