/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ வெங்கச்சேரி தடுப்பணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றம் வெங்கச்சேரி தடுப்பணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றம்
வெங்கச்சேரி தடுப்பணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றம்
வெங்கச்சேரி தடுப்பணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றம்
வெங்கச்சேரி தடுப்பணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றம்
ADDED : செப் 23, 2025 12:30 AM

வெங்கச்சேரி;திருவண்ணாமலை மாவட்டத்தில், சில நாட்களாக பெய்து வரும் மழையால், வெங்கச்சேரி தடுப்பணை நிரம்பி, உபரி நீர் வெளியேறி வருகிறது.
திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாது மலையில் உருவாகும் செய்யாறு, உத்திரமேரூர் ஒன்றியம், பெருநகர் வழியாக, காஞ்சிபுரம் மாவட்டத்திற்குள் நுழைகிறது.
அனுமந்தண்டலம், வெங்கச்சேரி, இளையனார்வேலுார் வழியாக திருமுக்கூடல் பகுதியில், பாலாறு மற்றும் வேகவதி ஆற்றுடன் உபரி நீர் கலக்கிறது.
இந்நிலையில், இரு நாட்களாக செய்யாற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால், அனுமந்தண்டலம் தடுப்பணையில் இருந்து வெளியேறிய உபரிநீரால், வெங்கச்சேரி தடுப்பணைமுழுமையாக நிரம்பி,உபரிநீர் வெளியேறி வருகிறது.
வடகிழக்கு பருவமழை துவங்குவதற்கு முன்பாகவே, வெங்கச்சேரி தடுப்பணை நிரம்பி, உபரிநீர் வெளியேறுவதால், வெங்கச்சேரி, மாகரல் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.