Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ சங்கர மடத்தின் மடாதிபதிகள் வரும் 6ல் காஞ்சிபுரம் வருகை

 சங்கர மடத்தின் மடாதிபதிகள் வரும் 6ல் காஞ்சிபுரம் வருகை

 சங்கர மடத்தின் மடாதிபதிகள் வரும் 6ல் காஞ்சிபுரம் வருகை

 சங்கர மடத்தின் மடாதிபதிகள் வரும் 6ல் காஞ்சிபுரம் வருகை

ADDED : டிச 03, 2025 06:33 AM


Google News
காஞ்சிபுரம்: ஹைதராபாத், மும்பை, புனே, கும்பகோணம் உள்ளிட்ட இடங்களில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்து விட்டு வரும் 6ம் தேதி, காஞ்சிபுரம் வருகை தரும் சங்கர மடத்தின் மடாதிபதிகளுக்கு நகரின் எல்லையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படஉள்ளது.

இது குறித்து காஞ்சிபுரம் சங்கர மடத்தின் மேலாளர் சுந்தரேச அய்யர் கூறியதாவது:

காஞ்சிபுரம் சங்கர மடத்தின் மடாதிபதி சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், இளைய மடாதிபதி சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் இருவரும் ஹைதராபாத், மும்பை, புனே, கும்பகோணம் உள்ளிட்ட ஊர்களில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் மஹா கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தும், பிற முக்கிய நிகழ்வுகளிலும் பங்கேற்று திருப்பதியில் உள்ள சங்கரமடத்திற்கு வந்தடைந்தார்கள்.

வரும் 6ம் தேதி, காலை காஞ்சிபுரம் தவளேஸ்வரர் கோவில் முன்பாக பாரம்பரிய முறைப்படி மடாதிபதிகளுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்படவுள்ளது.

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் ஸ்தானீகர்கள் மற்றும் நகர வரவேற்புக் குழு சார்பில், சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. தொடர்ந்து சங்கரமடத்தின் நுழைவாயிலில் பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்பதுடன், நகர முக்கியப் பிரமுகர்களும் வரவேற்பு அளிக்கவுள்ளனர்.

6ம் தேதி முதல், சங்கரமடத்தில், சுவாமிகள் இருவரும் சந்திர மவுலீஸ்வரர் பூஜையை தொடர்ந்து நடத்தவுள்ளனர். தொடர்ந்து அன்று மாலை 3:00 மணியளவில், ஏகாம்பரநாதர் கோவிலுக்கு ஏகாம்பரநாதர் இறைப்பணி அறக்கட்டளை சார்பில் சமர்ப்பிக்கப்படும் தங்கத்தேர் வெள்ளோட்ட விழாவை துவக்கி வைக்க உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us