/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ காஞ்சியில் உடைந்த சிறுபாலம் மாநகராட்சி நிர்வாகம் பாராமுகம் காஞ்சியில் உடைந்த சிறுபாலம் மாநகராட்சி நிர்வாகம் பாராமுகம்
காஞ்சியில் உடைந்த சிறுபாலம் மாநகராட்சி நிர்வாகம் பாராமுகம்
காஞ்சியில் உடைந்த சிறுபாலம் மாநகராட்சி நிர்வாகம் பாராமுகம்
காஞ்சியில் உடைந்த சிறுபாலம் மாநகராட்சி நிர்வாகம் பாராமுகம்
ADDED : மே 11, 2025 12:32 AM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட டி.கே.நம்பி தெருவில், மழைநீர் கால்வாய் செல்கிறது. இக்கால்வாயின் குறுக்கே சிறுபாலம் ஒன்று பல ஆண்டுகளுக்கு முன்பாக கட்டப்பட்டு பயன்பாட்டில் இருந்து வருகிறது.
சில மாதங்களுக்கு முன்பாக, இந்த சிறுபாலம் சிறிது, சிறிதாக உடைந்து தற்போது மோசமான நிலையில் உள்ளது. பாலத்தின் இரு பகுதியிலும் உள்ள கான்கிரீட் பெயர்ந்து, சிறுபாலத்தின் ஒரு பகுதி பூமிக்குள் புதைந்தவாறு உள்ளது.
இருப்பினும் அவ்வழியே வாகனங்கள் தொடர்ந்து இயக்கப்படுகின்றன. பாதுகாப்பிற்காக மாநகராட்சி நிர்வாகம் சார்பில் தடுப்பு ஏதும் வைக்கவில்லை.
சிறுபாலம் அருகே அஷ்டபுஜ பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில், கடந்த ஜனவரி மாதம் வைகுண்ட ஏகாதசி விழா நடந்தது. அதேபோல, சில நாட்கள் முன்பாக பிரம்மோத்சவம் நடந்தது.
இதுபோன்ற விசேஷ நாட்களில், இந்த சிறுபாலத்தில் பக்தர்கள் வரிசை கட்டி நிற்பார்கள். இதனால், சிறுபாலத்தை இடித்து புதிதாக கட்டித்தர மாநகராட்சி நிர்வாகத்திற்கு அப்பகுதியினர் தொடர்ந்து கோரிக்கை விடுத்தும் பாராமுகமாக உள்ளனர்.
சிறுபாலம் கட்டுவது தொடர்பான நடவடிக்கை இல்லாததால், விபத்தில் வாகன ஓட்டிகள் சிக்கும் சூழல் உள்ளது. உடனடியாக புதிய சிறுபாலம் கட்ட தேவையான நடவடிக்கை எடுக்க, அப்பகுதியினர் கோரிக்கை விடுக்கின்றனர்.