/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ காஞ்சியில் தெரு நாய்கள் பிடிக்கும் பணி துவங்கியது கருத்தடை செய்து பிடித்த இடத்திலேயே விட ஏற்பாடு காஞ்சியில் தெரு நாய்கள் பிடிக்கும் பணி துவங்கியது கருத்தடை செய்து பிடித்த இடத்திலேயே விட ஏற்பாடு
காஞ்சியில் தெரு நாய்கள் பிடிக்கும் பணி துவங்கியது கருத்தடை செய்து பிடித்த இடத்திலேயே விட ஏற்பாடு
காஞ்சியில் தெரு நாய்கள் பிடிக்கும் பணி துவங்கியது கருத்தடை செய்து பிடித்த இடத்திலேயே விட ஏற்பாடு
காஞ்சியில் தெரு நாய்கள் பிடிக்கும் பணி துவங்கியது கருத்தடை செய்து பிடித்த இடத்திலேயே விட ஏற்பாடு
ADDED : செப் 12, 2025 02:41 AM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சியில், தொண்டு நிறுவனத்துடன் இணைந்து, நாய்கள் பிடித்து கருத்தடை அறுவை சிகிச்சை செய்யும் பணி துவங்கியது.
காஞ்சிபுரம் மாநகராட்சியில் உள்ள 1,000க்கும் மேற்பட்ட தெருக்களில், 5,000க்கும் அதிகமான தெரு நாய்கள் உள்ளன.
அன்றாடம் நாய் கடியால் நகரவாசிகள் பாதிக்கும் நிலையில், நாய்களை பிடித்த, கருத்தடை செய்ய வேண்டும் என, நகரவாசிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். மாநகராட்சி கூட்டத்திலும், கவுன்சிலர்கள் இந்த கோரிக்கையை முன் வைத்தனர். அதைத் தொடர்ந்து, திருக்காலிமேடு பகுதியில், நாய்களுக்கான கருத்தடை மையம் சீரமைக்கப்பட்டது.
அறுவை சிகிச்சைக்கான உபகரணங்கள், கால்நடை மருத்துவர் உள்ளிட்டவையும் ஏற்பாடு செய்யப்பட்டது. மாநகராட்சியும் தொண்டு நிறுவனமும் இணைந்து ஆகஸ்ட் மாதம் இறுதியில் நாய்கள் பிடிக்கும் பணி துவங்கும் என, மாநகராட்சி சுகாதாரத் துறை தெரிவித்தது. ஆனால், நேற்று தான் நாய்கள் பிடிக்கும் பணி திருவீதிபள்ளம் பகுதியில் துவங்கி உள்ளது. பிடிக்கப்படும் நாய்கள், மறுநாளே கருத்தடை அறுவை சிகிச்சை செய்து, ரேபிஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டு, ஒரு வாரம் அங்குள்ள காப்பகத்தில் தங்க வைக்கப்படும்.
அதன்பின், பிடிக்கப்பட்ட இடத்திலேயே நாய்கள் விடப்படும் என, மாநகராட்சி சுகாதார பிரிவு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். நாய்கள் பிடிக்கும் பணி துவங்கி உள்ளதால், நகரவாசிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.