/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/பாலாறு ஓடை சவுக்கு மரங்களால் மின் மோட்டார் பழுதாகும் அபாயம்பாலாறு ஓடை சவுக்கு மரங்களால் மின் மோட்டார் பழுதாகும் அபாயம்
பாலாறு ஓடை சவுக்கு மரங்களால் மின் மோட்டார் பழுதாகும் அபாயம்
பாலாறு ஓடை சவுக்கு மரங்களால் மின் மோட்டார் பழுதாகும் அபாயம்
பாலாறு ஓடை சவுக்கு மரங்களால் மின் மோட்டார் பழுதாகும் அபாயம்
ADDED : ஜன 09, 2024 08:32 PM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அடுத்த, வில்லிவலம் ஊராட்சி உள்ளது. இங்கு, பாலாறு ஓடையில் நுாற்றுக்கணக்கான ஏக்கர் நிலத்தில் விவசாயிகள் சவுக்கு மரங்கள் சாகுபடி செய்து உள்ளனர்.
இதில், பல விவசாயிகள், பாலாறு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து, சவுக்கு மரங்களை நட்டுள்ளனர். இந்த சவுக்கு மரங்கள், 10 மீட்டர் உயரத்திற்கு, மின் வழித்தடத்திற்கு குறுக்கே வளர்ந்து நிற்கின்றன.
இதனால், விவசாய மின் இணைப்பு பெற்றிருக்கும் மின் நுகர்வோரின் மின் மோட்டார்கள் பழுதாகும் சூழல் உருவாகியுள்ளன.
குறிப்பாக, சவுக்கு தோப்பு நடுவே செல்லும் மின் வழித்தடத்தில், இடையூறாக இருக்கும் சவுக்கு மரங்களை அகற்றாததால், அடிக்கடி மின் மாற்றியில், 'பியூஸ்' என அழைக்கப்படும் இணைப்பு கம்பி துண்டிப்பு ஏற்படுகிறது.
இதை தவிர்க்க, சம்பந்தப்பட்ட மின் வாரிய அதிகாரிகள் மின் வழித்தடத்திற்கு இடையூறாக இருக்கும் சவுக்கு மரங்களை அகற்ற வேண்டும் என, விவசாயிகள் இடையே கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து, காஞ்சிபுரம் மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில், 'சம்பந்தப்பட்ட இடத்தை ஆய்வு செய்துவிட்டு இடையூறு மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.


