/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ மண் குவாரி லாரிகளால் சேதமான தொள்ளாழி சாலை மண் குவாரி லாரிகளால் சேதமான தொள்ளாழி சாலை
மண் குவாரி லாரிகளால் சேதமான தொள்ளாழி சாலை
மண் குவாரி லாரிகளால் சேதமான தொள்ளாழி சாலை
மண் குவாரி லாரிகளால் சேதமான தொள்ளாழி சாலை
ADDED : செப் 23, 2025 12:31 AM

வாலாஜாபாத்:உள்ளாவூர் ஏரியில் இயங்கும் மண் குவாரி லாரிகளால், தொள்ளாழி சாலை பழுதடைந்து குண்டும் குழியுமாக பயன்பாட்டிற்கு லாயக்கற்றதாக மாறி வருகிறது.
வாலாஜாபாத் ஒன்றியம், தொள்ளாழி கிராமத்தில் இருந்து, ஆம்பாக்கம் வழியாக வாரணவாசி செல்லும் சாலை உள்ளது.
நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமான இச்சாலை வழியை பயன்படுத்தி, உள்ளாவூர், வரதாபுரம், தொள்ளாழி, தோண்டாங்குளம், மதுரப்பாக்கம், ஆம்பாக்கம் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்தோர் பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.
இந்நிலையில், தொள்ளாழி அடுத்த உள்ளாவூர் கிராம ஏரியில் சில தினங்களுக்கு முன் அரசு அனுமதி பெற்ற தனியார் மண் குவாரி துவங்கப்பட்டது.
ஏரியில் இருந்து மண் ஏற்றிச் செல்லும் லாரிகள் தொள்ளாழி கிராம வழியாக பல பகுதிகளுக்கு இயங்குகின்றன.
அதிக பாரம் ஏற்றிச் செல்லும் இந்த லாரிகளால் தொள்ளாழி கிராம சாலை மிகவும் பழுதடைந்து குண்டும் குழியுமாக உள்ளது.
சாலையில் ஆங்காங்கே ஏற்பட்டுள்ள பள்ளங்களால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே, உள்ளாவூர் ஏரியில் இயங்கும் மண் குவாரியில் லாரிகளில் அதிக பாரம் ஏற்றுவதை தவிர்ப்பதோடு, மாற்று வழியில் லோடு வாகனங்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.