/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ குட்கா விற்ற மூவர் கைது 62 கிலோ பறிமுதல் குட்கா விற்ற மூவர் கைது 62 கிலோ பறிமுதல்
குட்கா விற்ற மூவர் கைது 62 கிலோ பறிமுதல்
குட்கா விற்ற மூவர் கைது 62 கிலோ பறிமுதல்
குட்கா விற்ற மூவர் கைது 62 கிலோ பறிமுதல்
ADDED : செப் 26, 2025 03:25 AM
ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் மற்றும் ஒரகடம் போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பெட்டி கடைகளில், குட்கா பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்த மூன்று பேரை போலீசார் நேற்று கைது செய்தனர். அவர்களிடமிருந்து 62 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
ஸ்ரீபெரும்புதுார் அடுத்த, ஆரநேரி பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்வதாக வந்த தகவலை அடுத்து, ஸ்ரீபெரும்புதுார் போலீசார் நேற்று அப்பகுதியில் உள்ள பெட்டி கடையில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
அதில், ராக்கெட் கோல்டு, ராம் பிரான்டு, சைக்கிள் பிரான்டு உள்ளிட்ட குட்கா பொருட்கள் மூட்டை, மூட்டையாக விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தது தெரிந்தது.
இதையடுத்து, 52 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், கடையின் உரிமையாளரான ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த நிர்மல் குமார் ராவுட், 49, என்பவரை கைது செய்தனர்.
அதே போல, ஒரகடம் அருகே, மாத்துார் கிராமத்தில் உள்ள இரண்டு பெட்டி கடைகளில் நடத்திய சோதனையில், 10 கிலோ குட்கா பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்த, ராமகிருஷ்ணன், 60, மற்றும் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ஜூபைர் அகமது, 25, ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.