ADDED : பிப் 12, 2024 06:13 AM
சென்னை,: சென்னை, பெரியமேடு, இ.கே.குரு தெருவைச் சேர்ந்தவர் மாசூன், 35; ஹோட்டல் ஊழியர். இரு தினங்களுக்கு முன், மாசூன் வேலை முடித்து, எழும்பூர் வடக்கு ரயில் நிலையம் அருகே நடந்து சென்றார். அப்போது, பெண் உட்பட ஐந்து பேர் வந்து, மாசூனை பிளேடால் வெட்டி வழிப்பறியில் ஈடுபட்டனர்.
புகாரின் படி எழும்பூர் போலீசார் பல்லாவரத்தைச் சேர்ந்த சங்கீதா, 23, சென்ட்ரல் பகுதியைச் சேர்ந்த சூர்யா, 24, பெரியமேடு விஜய், 20, மூவரை கைது செய்தனர். இருவரை தேடி வருகின்றனர்.