ADDED : பிப் 01, 2024 11:15 PM
காஞ்சிபுரம்:உத்திரமேரூர் ஒன்றியம், களியாம்பூண்டி அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் மரக்கன்று நடும் விழா நடந்தது.
இதில், பள்ளி மாணவர்களுடன் இணைந்து, காஞ்சி அன்னசத்திரம், பசுமை குழுவினர், பூவரசன் தேக்கு, மா, அத்தி, நாவல் உள்ளிட்ட மரக்கன்றுகள் நட்டனர்.
தொடர்ந்து, பிளாஸ்டிக் பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து மாணவ - - மாணவியரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.


