/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ காஞ்சி வரதர் கோவிலில் உறியடி உத்சவம் விமரிசை காஞ்சி வரதர் கோவிலில் உறியடி உத்சவம் விமரிசை
காஞ்சி வரதர் கோவிலில் உறியடி உத்சவம் விமரிசை
காஞ்சி வரதர் கோவிலில் உறியடி உத்சவம் விமரிசை
காஞ்சி வரதர் கோவிலில் உறியடி உத்சவம் விமரிசை
ADDED : செப் 17, 2025 01:24 AM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தியையொட்டி உறியடி உத்சவம் விமரிசையாக நடந்தது.
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தியையொட்டி நேற்று முன்தினம் மாலை 6:30 மணிக்கு, மூலவர் சன்னிதியில் இருந்து, வரதராஜ பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி நாச்சியார், கண்ணனுடன் கண்ணாடி அறையில் எழுந்தருளினர்.
அதைத் தொடர்ந்து திருமஞ்சனம் நடந்தது.நேற்று, காலை 7:30 மணிக்கு சேஷ வாகனத்தில் எழுந்தருளிய கண்ணன் மாட வீதிகளில் உலா வந்தார். தொடர்ந்து கண்ணாடி அறையில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
மாலை 5:30 மணிக்கு பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி நாச்சியார் மற்றும் கண்ணனுடன் மாட வீதிகளில் உலா வந்தார்.
இதில், சன்னிதி தெருவில் உள்ள ஆஞ்சநேயர் கோவில் முன் உறியடி உத்சவம் விமரிசையாக நடந்தது.
அதை தொடர்ந்து, குறுக்கு தெரு, அண்ணா தெரு, வடக்கு மாட வீதி, கிழக்கு மாட வீதி வழியாக அஸ்தகிரி தெருவிற்கு வரதராஜ பெருமாள் எழுந்தருளினார்.
அங்கு சுவாமி முன்னிலையில் சறுக்கு மரம் ஏறும் நிகழ்வு நடந்தது. தொடர்ந்து, சுவாமி அங்கிருந்து புறப்பாடாகி ஆனை கட்டி தெரு, சன்னிதி தெரு வழியாக கோவில் வந்தடைந்தார்.