Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/சங்கரா செவிலியர் கல்லுாரியில் 'வார்ஷிக உற்சவ் - 2கே24' விழா

சங்கரா செவிலியர் கல்லுாரியில் 'வார்ஷிக உற்சவ் - 2கே24' விழா

சங்கரா செவிலியர் கல்லுாரியில் 'வார்ஷிக உற்சவ் - 2கே24' விழா

சங்கரா செவிலியர் கல்லுாரியில் 'வார்ஷிக உற்சவ் - 2கே24' விழா

ADDED : ஜன 10, 2024 10:03 PM


Google News
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் சங்கரா செவிலியர் கல்லுாரி சார்பில், காஞ்சிபுரம் சங்கரமடம் 68வது பீடாதிபதி சங்கராச்சாரியார் ஜகத்குரு பூஜ்யஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளின், 'வார்ஷிக உற்சவ 2கே24' விழா நடந்தது.

இந்த விழாவிற்கு, சங்கரா குழுமங்களின் தலைவர் பம்மல் விஸ்வநாதன் தலைமை வகித்தார். சங்கரா பல்கலை கழக துணைவேந்தர் ஸ்ரீநிவாசு, சங்கரா குழும செயல் இயக்குனர் சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்கரா செவிலியர் கல்லுாரி முதல்வர் ராதிகா வரவேற்றார்.

டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவக்கல்லுாரி பல்கலை முன்னாள் துணை வேந்தர் சுதாசேஷய்யன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, ஆண்டறிக்கை புத்தகத்தை வெளியிட்டார்.

அதையடுத்து அவர் பேசியதாவது:

செவிலியர் கல்லுாரி துவங்கி, இரண்டு ஆண்டாகிறது. இளங்கலை அறிவியல் பாடப்பிரிவில், தனி சிறப்பு வாய்ந்தது, இளங்களை செவிலியர் பாடப்பிரிவு. பிற இளங்கலை பாடப்பிரிவுகளில், படித்துவிட்டு தான் சேவை செய்ய வேண்டும்.

இந்த செவிலியர் பாடப்பிரிவு படித்தவர்களுக்கு, சேவை மட்டுமே தொழிலாக செய்யலாம்.

செவிலியர்கள், நோயாளிகளிடத்தில், நம்பிக்கையாகவும். வயதானவர்களிடத்தில், கனிவாக பேச வேண்டும்.

நமக்குள் சேவை மனப்பான்மை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us