/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ டாஸ்மாக்கில் வாங்கிய மதுபாட்டிலில் புழு முட்டை டாஸ்மாக்கில் வாங்கிய மதுபாட்டிலில் புழு முட்டை
டாஸ்மாக்கில் வாங்கிய மதுபாட்டிலில் புழு முட்டை
டாஸ்மாக்கில் வாங்கிய மதுபாட்டிலில் புழு முட்டை
டாஸ்மாக்கில் வாங்கிய மதுபாட்டிலில் புழு முட்டை
ADDED : செப் 24, 2025 02:58 AM

சித்தாமூர்:சித்தாமூர் அடுத்த சரவம்பாக்கம் அரசு மதுபானக் கடையில் வாங்கிய மதுபாட்டிலில், புழு முட்டைகள் இருந்ததால், 'குடி'மகன்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
சித்தாமூர் அடுத்த சரவம்பாக்கம் கிராமத்தில், செய்யூர் - போளூர் மாநில நெடுஞ்சாலையில், அரசு மதுபானக்கடை எண் 4419 செயல்பட்டு வருகிறது.
இங்கு நேற்று, வழக்கம் போல மது விற்பனை நடந்து கொண்டிருந்தது.
அப்போது, வாழப்பட்டு பகுதியைச் சேர்ந்த விஜயசாரதி, 35, என்பவர், 180 எம்.எல்., அளவுடைய பிராந்தி மதுபாட்டிலை வாங்கியுள்ளார்.
மது அருந்துவதற்காக அதை திறக்க முற்படும் போது, சீலிடப்பட்ட பாட்டிலின் உள்பகுதியின் அடியில், புழு முட்டைகள் இருந்துள்ளன. இதைப் பார்த்து அதிர்ச்சியான சக குடிமகன்கள், மதுபாட்டிலில் புழு முட்டை இருப்பதால், உடல் உபாதை ஏற்படும் என பீதியடைந்தனர்.
பாட்டில்களை முறையாக சுத்தப்படுத்தாமல் மது நிரப்புவதால், புழு முட்டைகள் உருவாகி இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
இது குறித்து, துறை சார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.