/உள்ளூர் செய்திகள்/கன்னியாகுமரி/ பகவதி அம்மன் கோவில் தீர்த்த கிணற்றை சுத்தம் செய்ய முடிவு பகவதி அம்மன் கோவில் தீர்த்த கிணற்றை சுத்தம் செய்ய முடிவு
பகவதி அம்மன் கோவில் தீர்த்த கிணற்றை சுத்தம் செய்ய முடிவு
பகவதி அம்மன் கோவில் தீர்த்த கிணற்றை சுத்தம் செய்ய முடிவு
பகவதி அம்மன் கோவில் தீர்த்த கிணற்றை சுத்தம் செய்ய முடிவு
ADDED : ஜூலை 25, 2024 11:57 PM
நாகர்கோவில்:கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் உள்ள தீர்த்த கிணற்றை திறந்து சுத்தப்படுத்த தேவசம்போர்டு முடிவு செய்துள்ளது.
பரசுராமரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில், 1,000 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்தது. இக்கோவிலின் வடக்கு பக்கத்தில் தீர்த்த கிணறு உள்ளது. கோவில் பூஜாரிகள் சுரங்கப்பாதை வழியாக கிணறுக்கு சென்று தண்ணீர் எடுத்து அம்மனுக்கு அபிஷேகம், நைவேத்தியம் செய்ய பயன்படுத்துவர்.
கிணறுக்கு இரும்பு கம்பிகளால் ஆன மூடி பொருத்தப்பட்டிருந்தாலும் பக்தர்கள் அந்த துவாரம் வழியாக நாணயங்களையும் நகைகளையும் காணிக்கையாக போடுகின்றனர். நூற்றாண்டுகளாக இந்த நாணயங்கள் உள்ளிட்ட பொருட்கள் அங்கு அப்படியே கிடக்கிறது.
தொடர்ந்து, கிணறு மூடியை திறந்து நாணயங்களை சேகரித்துவிட்டு, கிணறை சுத்தம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக தேவசம்போர்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.