/உள்ளூர் செய்திகள்/கன்னியாகுமரி/ பா.ஜ., முதல் எம்.எல்.ஏ.,வுக்கு மணிமண்டபம் திறப்பு பா.ஜ., முதல் எம்.எல்.ஏ.,வுக்கு மணிமண்டபம் திறப்பு
பா.ஜ., முதல் எம்.எல்.ஏ.,வுக்கு மணிமண்டபம் திறப்பு
பா.ஜ., முதல் எம்.எல்.ஏ.,வுக்கு மணிமண்டபம் திறப்பு
பா.ஜ., முதல் எம்.எல்.ஏ.,வுக்கு மணிமண்டபம் திறப்பு
ADDED : ஜூலை 24, 2024 06:35 AM
நாகர்கோவில் : தமிழகத்தில் பா.ஜ., முதல் எம்.எல்.ஏ.,வாக தேர்வான வேலாயுதனுக்கு சிலையுடன் கூடிய மணிமண்டபத்தை, அவருடைய சொந்த ஊரான கன்னியாகுமரி மாவட்டம் கருப்புக்கோட்டில், கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை நேற்று திறந்து வைத்தார்.
கடந்த 1996 தேர்தலில் பத்மநாபபுரம் தொகுதியில் பா.ஜ., சார்பில் போட்டியிட்டு 4,540 ஓட்டுகள் வித்தியாசத்தில் தி.மு.க., வேட்பாளர் பால ஜனாதிபதியை தோற்கடித்து முதல் பா.ஜ., எம்.எல்.ஏ., என்ற பெருமையை வேலாயுதன் பெற்றார். கடந்த மே 8ல் வேலாயுதன் காலமானார்.
அவரது சொந்த ஊரான கருப்புக்கோட்டில் முழு உருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம் கட்டப்பட்டது. இதை, மாநில தலைவர் அண்ணாமலை நேற்று திறந்து வைத்தார்.
பின் அவர் பேசியதாவது:
பா.ஜ.,வுக்கும், தி.மு.க.,வுக்கும் ஏணி வைத்தால்கூட எட்டாதஅளவுக்குத்தான் சித்தாந்த வேறுபாடு உள்ளது. அப்படிப்பட்ட தி.மு.க.,வின் தலைவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி கூட, வேலாயுதன் குறித்து உயர்வாகப் பேசியுள்ளார். முதல்வர் ஸ்டாலினும், அவர் குறித்து உயர்வாகவே பேசியுள்ளார்.
பா.ஜ., ஆட்சிக்கு வர வேண்டும் என வேலாயுதன் கூறி வந்தார். நம் கட்சி அதை நோக்கிச் செல்லும் நிலையைப் பார்க்க அவர் இல்லை.
அவரது நினைவாக கன்னியாகுமரி மாவட்டத்தில் 10 மற்றும், 12ம் வகுப்புகளில் முதல் மூன்று இடங்களை பெறும் மாணவர்களுக்கு, 3 லட்சம் ரூபாய் மதிப்பில் கல்வி உதவித்தொகை வழங்கப்படும்.
இவ்வாறு பேசினார்.