/உள்ளூர் செய்திகள்/கன்னியாகுமரி/ ஆதார் அட்டை இல்லை என்பதால் நோயாளிக்கு சிகிச்சை அளிக்க மறுப்பு * நாகர்கோவில் அரசு ஆஸ்பத்திரி நிர்வாகம் அடாவடி ஆதார் அட்டை இல்லை என்பதால் நோயாளிக்கு சிகிச்சை அளிக்க மறுப்பு * நாகர்கோவில் அரசு ஆஸ்பத்திரி நிர்வாகம் அடாவடி
ஆதார் அட்டை இல்லை என்பதால் நோயாளிக்கு சிகிச்சை அளிக்க மறுப்பு * நாகர்கோவில் அரசு ஆஸ்பத்திரி நிர்வாகம் அடாவடி
ஆதார் அட்டை இல்லை என்பதால் நோயாளிக்கு சிகிச்சை அளிக்க மறுப்பு * நாகர்கோவில் அரசு ஆஸ்பத்திரி நிர்வாகம் அடாவடி
ஆதார் அட்டை இல்லை என்பதால் நோயாளிக்கு சிகிச்சை அளிக்க மறுப்பு * நாகர்கோவில் அரசு ஆஸ்பத்திரி நிர்வாகம் அடாவடி
ADDED : ஜூலை 18, 2024 10:25 PM
களக்காடு:ஆதார் அட்டை இல்லை என்பதால் நோயளிக்கு சிகிச்சை அளிக்க நாகர்கோவில் அரசு ஆஸ்பத்திரி நிர்வாகம் மறுப்பு தெரிவித்து அவரை வெளியே அனுப்பிய சம்பவம் நடந்துள்ளது.
நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள சிதம்பரபுரம், பாண்டியாபுரம் நடுத்தெருவை சேர்ந்தவர் சொர்ணலிங்கம் மகன் சுதாகர் (35). பனை ஏறும் தொழிலாளி. கடந்த 14ம் தேதி பனை மரத்தில் ஏறி, பதநீர் வரும் பாளையை அரிவாளால் சீவிக் கொண்டிருந்த போது திடீர் என தவறி கீழே விழுந்தார்.
இதில் படுகாயம் அடைந்த சுதாகரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
பரிசோதனையில் அவருக்கு முதுகில் எழும்பு முறிவு ஏற்பட்டுள்ளதும் தெரியவந்தது. இதற்காக அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் முடிவு செய்ததாக தெரிகிறது. அதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டது.
இதற்கிடையே சுதாகரின் ஆதார் அட்டை தரும்படி மருத்துவமனை நிர்வாகத்தினர் கேட்டு உள்ளனர். ஆனால் சுதாகர் ஆதார் அட்டை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து மருத்துவமனை நிர்வாகத்தினர் அவருக்கு சிகிச்சை அளிக்க மறுத்து, அவரை வெளியேற்றியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து அவரை உறவினர்கள் சிதம்பரபுரத்தில் உள்ள வீட்டிற்கு அழைத்து வந்தனர். அங்கு அவர் வேதனையால் துடித்த வண்ணம், படுத்த படுக்கையாக உள்ளார். சுதாகருக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற போதுமான பண வசதி இல்லை என்று உறவினர்கள் வேதனையுடன் கூறுகின்றனர்.
எனவே சுதாகரை மீண்டும் அரசு மருத்துவமனையில் அனுமதித்து உரிய சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உறவினர்களும். ஊர் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.