/உள்ளூர் செய்திகள்/கன்னியாகுமரி/ குழந்தை கொடூர கொலை : தாய் கள்ளக்காதலனுக்கு ஆயுள் தண்டனை குழந்தை கொடூர கொலை : தாய் கள்ளக்காதலனுக்கு ஆயுள் தண்டனை
குழந்தை கொடூர கொலை : தாய் கள்ளக்காதலனுக்கு ஆயுள் தண்டனை
குழந்தை கொடூர கொலை : தாய் கள்ளக்காதலனுக்கு ஆயுள் தண்டனை
குழந்தை கொடூர கொலை : தாய் கள்ளக்காதலனுக்கு ஆயுள் தண்டனை
ADDED : செப் 25, 2025 12:19 AM
நாகர்கோவில்:உறவுக்கு இடையூறாக இருந்த கைக்குழந்தையை கொடூரமாக கொலை செய்த தாய், கள்ளக்காதலனுக்கு ஆயுள் தண்டனை விதித்து நாகர்கோவில் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
கன்னியாகுமரி மாவட்டம் தூத்தூர் ஸ்டேஜ் விளாகம் பகுதியைச் சேர்ந்தவர் பிரபுஷா 23.
இரண்டு மகன்கள் உள்ளனர். பிரபுஷாவிற்கு வீட்டின் அருகில் பரோட்டா கடை நடத்தி வந்த காஞ்சா புறத்தைச் சேர்ந்த சதாம் உசைன் 32 என்பவருடன் கள்ளக்காதல் ஏற்பட்டது. இதை பிரபுஷாவின் கணவர் கண்டித்தார். ஆனால் இருவரும் கள்ளத்தொடர்பை விடவில்லை.
எனவே மூத்த மகனை அழைத்துக் கொண்டு கணவர் பிரிந்து சென்று விட்டார். இளைய மகன் 15 மாத அரிஸ்டோ பியூலஸ் பிரபுஷாவுடன் இருந்தார். பிரபுஷாவும், சதாம் உசேனும், குழந்தையுடன் குஜராத், தூத்துக்குடி போன்ற இடங்களுக்கு சென்றனர். 2023 நவ. 14 அன்று மயிலாடியில் உள்ள கோழிப்பண்ணையில் வேலைக்கு சேர்ந்தனர் அங்கு இருவரும் கணவன் மனைவி என்று கூறியுள்ளனர்.
சதாம் உசேனும் பிரபு ஷாவும் உல்லாசமாக இருந்தபோது குழந்தை அரிஸ்டோ பியூலஸ் அழுது தொந்தரவு செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சதாம் உசேன் குழந்தையை தாக்குவது, சிகரெட்டால் சூடு வைப்பது, சோறை வாயில் திணித்து கரண்டியால் குத்துவது என சித்திரவதை செய்துள்ளார்.
குழந்தையை துாக்கி தரையில் வீசியதில் குழந்தைக்கு விலா எலும்பு முறிந்தது. பிரபுஷாவும் இதற்கு உடந்தையாக இருந்துள்ளார்.
குழந்தை மயக்க நிலை அடைந்ததால் கோட்டாரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு நவ.16 அன்று இரவு 11.00 மணிக்கு கொண்டு சென்றனர். குழந்தையை பரிசோதித்த டாக்டர் குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்தார். மருத்துவமனையில் இருந்து கொடுத்த தகவலின் பேரில் அஞ்சு கிராமம் போலீசார் சதாம் உசேன், பிரபுஷாவை கைது செய்தனர்.
இந்த வழக்கில் இருவருக்கும் ஆயுள் தண்டனை விதித்து மாவட்ட செஷன்ஸ் நீதிபதி கார்த்திகேயன் தீர்ப்பளித்தார்.