Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கரூர்/ வாய்க்காலில் ஆகாய தாமரைஅகற்ற விவசாயிகள் எதிர்பார்ப்பு

வாய்க்காலில் ஆகாய தாமரைஅகற்ற விவசாயிகள் எதிர்பார்ப்பு

வாய்க்காலில் ஆகாய தாமரைஅகற்ற விவசாயிகள் எதிர்பார்ப்பு

வாய்க்காலில் ஆகாய தாமரைஅகற்ற விவசாயிகள் எதிர்பார்ப்பு

ADDED : மார் 20, 2025 01:11 AM


Google News
வாய்க்காலில் ஆகாய தாமரைஅகற்ற விவசாயிகள் எதிர்பார்ப்பு

கரூர்:கரூர் அருகே அமராவதி ஆற்றின், கிளை வாய்க்காலில் முளைத்துள்ள, ஆகாய தாமரை செடிகளை அகற்ற வேண்டும் என, விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

திருப்பூர் மாவட்டம், உடுமலை பேட்டை அமராவதி அணையில் இருந்து, கரூர் மாவட்டத்தில் சம்பா சாகுபடிக்காக, தண்ணீர் திறக்கப்பட்டது. தற்போது, அரவக்குறிச்சி, க.பரமத்தி, தான்தோன்றிமலை பஞ்சாயத்து யூனியன் பகுதிகளில், அமராவதி ஆற்றுப்பகுதியில் நெல் அறுவடை நிறைவு பெறும் நிலையில் உள்ளது.

தற்போது, அடுத்த கட்ட சாகுபடிக்காக, நிலத்தை சமன்படுத்தும் பணிகள் நடப்பதால், அமராவதி அணையில் இருந்து, குறைந்தளவே தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. ஆனால், கிளை வாய்க்காலில் தண்ணீர் செல்கிறது. இந்நிலையில், கரூர் அருகே பெரிய ஆண்டாங்கோவில் அக்ரஹாரம் வழியாக செல்லும், அமராவதி ஆற்றின் கிளை வாய்க்காலில், பிளாஸ்டிக் பொருட்கள், குப்பை, ஆகாய தாமரை செடிகள் அதிகளவில் காணப்படுகிறது.

இதனால், நீரோட்டம் தடைப்பட்டுள்ளது. எனவே, அமராவதி ஆற்றின் கிளை வாய்க்காலில் தேங்கியுள்ள பிளாஸ்டிக் பொருட்கள், குப்பை கழிவுகள் மற்றும் ஆகாய தாமரை செடிகளை அகற்ற, நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us