/உள்ளூர் செய்திகள்/கரூர்/ சேதமான நடைபாலம்வல்லம் கிராமத்தினர் அவதி சேதமான நடைபாலம்வல்லம் கிராமத்தினர் அவதி
சேதமான நடைபாலம்வல்லம் கிராமத்தினர் அவதி
சேதமான நடைபாலம்வல்லம் கிராமத்தினர் அவதி
சேதமான நடைபாலம்வல்லம் கிராமத்தினர் அவதி
ADDED : மார் 18, 2025 01:52 AM
சேதமான நடைபாலம்வல்லம் கிராமத்தினர் அவதி
கிருஷ்ணராயபுரம்:வாய்க்கால் நடைபாலம் சேதமடைந்துள்ளதால், பயன்படுத்த முடியாமல் மக்கள் அவதிப்படுகின்றனர்.கிருஷ்ணராயபுரம் அடுத்த பிள்ளபாளையம் பஞ்சாயத்து, வல்லம் கிராமத்தில் மாயனுார் காவிரி ஆற்றில் இருந்து பிரிந்து செல்லும் கட்டளை மேட்டு வாய்க்கால், திருச்சி வரை செல்கிறது. வல்லம் பகுதியில் வாய்க்கால் நடுவே, சிறிய நடைபாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த நடைபாலத்தை அப்பகுதி மக்கள் பிரதானமாக பயன்படுத்தி வருகின்றனர்.
தற்போது, நடைபால தடுப்பு சுவர்கள் சிதிலமடைந்தும், கான்கிரீட்கள் பெயர்ந்தும் காணப்படுகிறது. இதனால் நடைபாலத்தை பயன்படுத்த அச்சப்படுகின்றனர். இருப்பினும் ஒரு சிலர், ஆபத்தான முறையில் கடந்து செல்கின்றனர். விபத்து நேரும் முன், சேதமடைந்துள்ள நடைபாலத்தை சீரமைக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.