ADDED : மார் 16, 2025 01:24 AM
கஞ்சா வைத்திருந்தவர் கைது
கரூர்:கரூர் அருகே, கஞ்சா வைத்திருந்ததாக வாலிபரை, போலீசார் கைது செய்தனர்.கரூர் மாவட்டம், வெங்கமேடு போலீஸ் எஸ்.ஐ., ஆர்த்தி உள்ளிட்ட போலீசார், நேற்று முன்தினம் என்.எஸ்.கே., நகர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சட்ட விரோதமாக, 100 கிராம் கஞ்சா வைத்திருந்ததாக, வெங்கமேடு கொங்கு நகரை சேர்ந்த மாரிமுத்து, 35, என்பவரை போலீசார் கைது செய்தனர்.