Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கரூர்/ லாலாப்பேட்டை மண்டியில்வாழைத்தார்கள் விற்பனை

லாலாப்பேட்டை மண்டியில்வாழைத்தார்கள் விற்பனை

லாலாப்பேட்டை மண்டியில்வாழைத்தார்கள் விற்பனை

லாலாப்பேட்டை மண்டியில்வாழைத்தார்கள் விற்பனை

ADDED : மார் 21, 2025 01:57 AM


Google News
லாலாப்பேட்டை மண்டியில்வாழைத்தார்கள் விற்பனை

கிருஷ்ணராயபுரம்:லாலாப்பேட்டை கமிஷன் மண்டியில், வாழைத்தார்கள் விற்பனை நடந்தது.கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பிள்ளபாளையம், வல்லம், கொம்பாடிப்பட்டி, வீரவள்ளி, வீரகுமரான்பட்டி, கருப்பத்துார், கள்ளப்பள்ளி, சிந்தலவாடி ஆகிய இடங்களில் வாழை சாகுபடி செய்யப்படுகிறது. வாழைத்தார்கள் அறுவடை செய்து, கமிஷன் மண்டிகளில் கொண்டு வந்து விற்று வருகின்றனர்.

கடந்த மாதம் முதல், வாழைத்தார்கள் விலை உயர்ந்து விற்பனையாகி வருகிறது. நேற்று பூவன் வாழைத்தார் ஒன்று, 300 ரூபாய், ரஸ்தாளி தார், 350 ரூபாய், கற்பூரவள்ளி தார், 200 ரூபாய்க்கு விற்கப்பட்டது. வாழைத்தார்களை ஏராளமான வியாபாரிகள் வாங்கி சென்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us