ADDED : மே 03, 2026 01:45 AM
அ நிறம் | அளவு
அரவக்குறிச்சி :அரவக்குறிச்சி அருகே உள்ள கனகாபுரியில், நிழற்கூடம் அமைத்து தர மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அரவக்குறிச்சி அருகே கனகாபுரி காரபாளையம் பகுதியில், 60க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இப்பகுதி மாணவர்கள், கூலி வேலை செய்வோர் என தினமும் பள்ளி, கல்லுாரி மற்றும் வேலைநிமித்தமாக அரவக்குறிச்சி, கரூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு பஸ்கள் மூலம் சென்று வருகின்றனர்.
ஆனால், இப்பகுதியில் பயணிகள் நிழற்கூடம் இல்லாததால் மக்கள் சிரமப்படுகின்றனர். வெயிலிலும் மழையிலும் பஸ்சுக்காக பயணிகள் காத்திருக்கும் சூழ்நிலை நிலவுகிறது. எனவே, கனகாபுரி ஓடை பஸ் நிறுத்தம் பகுதியில், உடனடியாக நிழற்கூடம் அமைத்து தர வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
