/உள்ளூர் செய்திகள்/கரூர்/ பாலமலை பாலசுப்பிரமணி கோவிலில் ஜூலை 29ல் தேரோட்டம் பாலமலை பாலசுப்பிரமணி கோவிலில் ஜூலை 29ல் தேரோட்டம்
பாலமலை பாலசுப்பிரமணி கோவிலில் ஜூலை 29ல் தேரோட்டம்
பாலமலை பாலசுப்பிரமணி கோவிலில் ஜூலை 29ல் தேரோட்டம்
பாலமலை பாலசுப்பிரமணி கோவிலில் ஜூலை 29ல் தேரோட்டம்
ADDED : ஜூலை 26, 2024 02:33 AM
கரூர்: பவித்திரம், பாலமலை பாலசுப்பிரமணி கோவிலில் வரும், 29ல் ஆடி மாத கிருத்திகையையொட்டி தேரோட்டம் நடக்கிறது.
க.பரமத்தி ஒன்றியம், பவித்திரம் ஊராட்சியில் பாலமலை பால-சுப்பிரமணி கோவில் உள்ளது. இங்கு அமாவாசை, பவுர்ணமி, கிருத்திகை, சஷ்டி உள்பட முக்கிய விரத நாட்களில் பாலசுப்பிரம-ணிருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்று வருகிறது. வரும், 29ல் 49வது ஆண்டு ஆடி கிருத்திகை விழா நடக்கிறது. கரூர் ஐந்து ரோடு அமராவதி ஆற்றங்கரை பகுதியில் இருந்து, பால்குடம் காவடிகளுடன் புறப்பட்டு கரூர் மாரியம்மன்கோவில் கடைவீதி, கரூர் கோவை தேசிய நெடுஞ்சாலை வழியாக ஊர்வல-மாக பாலமலை கோவிலுக்கு வரும். பின் காலை, 11.00 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகமும், சந்தனகாப்பு அலங்காரமும் செய்யப்பட்டு வழிபாடு செய்யப்பட உள்ளது.
தொடர்ந்து தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு, விழா குழுவி-னரால் அன்னதானம் வழங்கப்படுகிறது. அன்றைய தினம் இரவு 7:00 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது.