/உள்ளூர் செய்திகள்/கரூர்/ குளித்தலை வட்டாட்சியர் அலுவலகத்தில் எழுச்சி நாள் கண்டன ஆர்ப்பாட்டம் குளித்தலை வட்டாட்சியர் அலுவலகத்தில் எழுச்சி நாள் கண்டன ஆர்ப்பாட்டம்
குளித்தலை வட்டாட்சியர் அலுவலகத்தில் எழுச்சி நாள் கண்டன ஆர்ப்பாட்டம்
குளித்தலை வட்டாட்சியர் அலுவலகத்தில் எழுச்சி நாள் கண்டன ஆர்ப்பாட்டம்
குளித்தலை வட்டாட்சியர் அலுவலகத்தில் எழுச்சி நாள் கண்டன ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூலை 02, 2024 08:07 PM

கரூர் மாவட்டம் குளித்தலை வட்டாட்சியர் அலுவலகத்தில் மாலை 6:00 மணி அளவில் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் எழுச்சி நாள் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கல்வித்துறை வட்ட கிளை தலைவர் பாண்டி கண்ணன் தலைமை வைத்தார்.
மருத்துவத்துறை வட்டக் கிளை செயலாளர் பரிமனம் முன்னிலை வைத்தார்.
ஒன்பது அம்ச கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி வருவாய்த்துறை மாவட்ட துணை தலைவர் குளித்தலை துணை வட்டாட்சியர் வைரப் பெருமாள், நகராட்சி துறை மாவட்ட துணைத் தலைவர் அறிவழகன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில துணைத்தலைவர் செல்வராணி, மற்றும் அனைத்து அரசு துறை நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் கண்டன உரையாற்றினர்.இறுதியாக கல்வித்துறை வட்டக்கிளை பொறுப்பாளர் தியாகராஜன் நன்றி கூறினார்.
இந்த எழுச்சி நாள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.