/உள்ளூர் செய்திகள்/கரூர்/ ரூ.16 லட்சம் ஒப்பந்ததாரருக்கு பாக்கி பாதாள சாக்கடை சீரமைப்பு பணி இழுபறி ரூ.16 லட்சம் ஒப்பந்ததாரருக்கு பாக்கி பாதாள சாக்கடை சீரமைப்பு பணி இழுபறி
ரூ.16 லட்சம் ஒப்பந்ததாரருக்கு பாக்கி பாதாள சாக்கடை சீரமைப்பு பணி இழுபறி
ரூ.16 லட்சம் ஒப்பந்ததாரருக்கு பாக்கி பாதாள சாக்கடை சீரமைப்பு பணி இழுபறி
ரூ.16 லட்சம் ஒப்பந்ததாரருக்கு பாக்கி பாதாள சாக்கடை சீரமைப்பு பணி இழுபறி
ADDED : ஜூலை 31, 2024 01:38 AM
கரூர்:பாதாள சாக்கடை பணிக்கு, 16 லட்சம் ரூபாய் பாக்கி வர வேண்டியுள்ளதால், சீரமைப்பு பணி இழுபறியில் இருந்து வருகிறது.
கரூர் மாநகராட்சியில் மொத்தமுள்ள, 48 வார்டுகளில், முதல் வார்டு முதல், 32வது வார்டு வரை பாதாள சாக்கடை திட்டம் செயல்பாட்டில் உள்ளது. அதில், 14 ஆயிரம் பாதாள சாக்கடை இணைப்புகள் உள்ளன. வாங்கல் சாலை, ராஜாஜி சாலை, ரத்தினம் சாலை, அண்ணா வளைவு, கோவை சாலை ஆகிய இடங்களில், பலமுறை பள்ளங்கள் ஏற்பட்டது. பல மாதங்கள் போராடி புதிய குழாய்கள் போடப்பட்டு, பள்ளம் சரி செய்யப்பட்டு மூடப்பட்டது.
இந்நிலையில் கடந்த ஜூன், 7ல், -வாங்கல் சாலை பழைய நீதிமன்றம் அருகே, பாதாள சாக்கடை குழாயில் ஏற்பட்ட அழுத்தம் காரணமாக, மீண்டும் பள்ளம் விழுந்தது. பாதாள சாக்கடை குழாய் மாற்றுவது உள்பட பல்வேறு பணிகளுக்கு, 19 லட்சம் ரூபாய் செலவில் பணிகள் நடந்தது. சீரமைப்பு பணிகள் ஆமை வேகத்தில் நடந்ததால், ஒரு மாதத்திற்கு பின் கடந்த, 6ல் மீண்டும் போக்குவரத்துக்கு விடப்பட்டது. ஒரே நாளில் மீண்டும் மண் சரிவு ஏற்பட்டதால், சீரமைப்பு பணிகள் நடந்து வருகிறது. கடந்த ஆண்டு செய்த பணிக்கு, ஒப்பந்ததாரருக்கு வழங்க வேண்டிய தொகை நிலுவையில் இருப்பதால், இப்போது மந்தகதியில் பணிகள் நடந்து வருகிறது.
இது குறித்து, மாநகராட்சி அலுவலர் ஒருவர் கூறியதாவது:
கடந்த ஆண்டு, கரூர் ரத்தினம் சாலையில் பாதாள சாக்கடை பள்ளம் ஏற்பட்டது. அங்கு, 16 லட்சம் ரூபாய் செலவில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. ஓராண்டுக்கு மேலாக பணி செய்த ஒப்பந்ததாரருக்கு, பில் தொகை வழங்கப்படாமல் இழுத்தடிக்கப்பட்டு வருகிறது. பழைய நீதிமன்றம் அருகே ஏற்பட்டுள்ள பள்ளத்தை, அதே ஒப்பந்ததாரரை வைத்து பணிகள் மேற்கொள்ள வலியுறுத்தப்பட்டது. அவரிடம், 'பழைய பாக்கி தொகை தந்து விடுகிறோம், பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்' என, அதிகாரிகள் கேட்டு கொண்டனர். உறுதியளித்த தொகை வழங்கவில்லை என்பதால், ஒப்பந்ததாரரும் பணம் இல்லை என்று பணியை கிடப்பில் போட்டு விட்டு சென்றுள்ளார். இரண்டு மாதங்களாக, கரூர் நகரில் இருந்து, கருப்பாயி கோவில் தெரு வழியாக, நெரூர், வாங்கல், பசுபதிபாளையம், தொழிற்பேட்டை பகுதிகளுக்கு செல்லும் மக்கள், மாற்று பாதையில் சுற்றி, சென்று வருகின்றனர்.
இவ்வாறு கூறினார்.
-