/உள்ளூர் செய்திகள்/கரூர்/ கரூரில் குழாய் உடைந்து சாலையில் ஓடிய குடிநீர் கரூரில் குழாய் உடைந்து சாலையில் ஓடிய குடிநீர்
கரூரில் குழாய் உடைந்து சாலையில் ஓடிய குடிநீர்
கரூரில் குழாய் உடைந்து சாலையில் ஓடிய குடிநீர்
கரூரில் குழாய் உடைந்து சாலையில் ஓடிய குடிநீர்
ADDED : ஜூன் 17, 2024 01:33 AM
கரூர்: கரூரில், நேற்று குழாய் உடைந்து குடிநீர் பல மணி நேரம் ஆறாக சாலையில் ஓடியது.
கரூர் மாநகராட்சி பகுதிகளுக்கு, காவிரியாற்றில், வாங்கல், கட்டளை பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள நீரேற்று நிலையங்கள் மூலம், குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. பிறகு, பொது குழாய் மற்றும் வீடுகள், வர்த்தக நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட இணைப்புகளுக்கு தண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது. இந்
நிலையில், நேற்று காலை கரூர் -
திருச்சி சாலை, சுங்ககேட் காவிரி கிராஸ் சாலை, தெரசா கார்னர் பகுதியில் குழாய் உடைந்து பல மணி நேரம், குடிநீர் சாலையில் ஓடியது. மாநகராட்சி பகுதியில், குறைந்தபட்சம் ஏழு நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது. இருக்கும் நீரை மிச்சப்படுத்தி, அனைத்து பகுதிகளுக்கும் வழங்கலாம்.
எனவே, குடிநீர் பற்றாக்குறை ஏற்படாத வகையில், கரூர் மாநகராட்சி பகுதியில் உடைந்த குடிநீர் குழாயை, உடனடியாக சரி செய்ய, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.