/உள்ளூர் செய்திகள்/கரூர்/ தடையை மீறி ஆர்ப்பாட்டம் தமிழர் தேசம் கட்சியினர் கைது தடையை மீறி ஆர்ப்பாட்டம் தமிழர் தேசம் கட்சியினர் கைது
தடையை மீறி ஆர்ப்பாட்டம் தமிழர் தேசம் கட்சியினர் கைது
தடையை மீறி ஆர்ப்பாட்டம் தமிழர் தேசம் கட்சியினர் கைது
தடையை மீறி ஆர்ப்பாட்டம் தமிழர் தேசம் கட்சியினர் கைது
ADDED : ஜூன் 29, 2024 02:29 AM
கரூர்: கரூர் அருகே, தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக, தமிழர் தேசம் கட்சியினரை போலீசார் கைது செய்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணா
புரத்தில் கள்ளச் சாராயம் குடித்து
உயிரிழந்த சம்பவத்தை கண்டித்து, கரூர் வட்டார போக்குவரத்து அலுவலகம் முன், நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடத்த, தமிழர் தேசம் கட்சியினர் முடிவு செய்தனர். ஆனால், ஆர்ப்பாட்டம் நடத்த போலீசார் அனுமதி மறுத்தனர். இந்
நிலையில், போலீசாரின் தடையை மீறி, ஆர்ப்பாட்டம் நடத்திய கரூர் கிழக்கு மாவட்ட தலைவர் அருள்ராஜ் உள்பட, 19 பேரை தான்தோன்றிமலை போலீசார் கைது செய்தனர்.