/உள்ளூர் செய்திகள்/கரூர்/ சுற்றுச்சூழல் துறை சார்பில் மரக்கன்று நடும் விழா சுற்றுச்சூழல் துறை சார்பில் மரக்கன்று நடும் விழா
சுற்றுச்சூழல் துறை சார்பில் மரக்கன்று நடும் விழா
சுற்றுச்சூழல் துறை சார்பில் மரக்கன்று நடும் விழா
சுற்றுச்சூழல் துறை சார்பில் மரக்கன்று நடும் விழா
ADDED : ஜூலை 28, 2024 03:22 AM
கரூர்: கரூர் மாவட்ட சுற்றுச்சூழல் மற்றும் கால நிலை மாற்றம் துறை சார்பில், தண்ணீர் பள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், மரக்கன்றுகள் நடும் விழா நேற்று நடந்தது.
அதில் பள்ளி வளாகத்தில், 35 வகையான மரக்கன்றுகள் நடப்-பட்டது. தொடர்ந்து, சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும், இயற்-கையை பாதுகாக்க, மண்வளம் அவசியம் என, உறுதி மொழி எடுக்கப்பட்டது.
விழாவில், தேசிய பசுமை படை ஒருங்கிணைப்பாளர் திரு-மூர்த்தி, சீடு டிரஸ்ட் பெண்கள் ஒருங்கிணைப்பாளர் அம்சவள்ளி, தேக்கமலை, கோபால் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.