/உள்ளூர் செய்திகள்/கரூர்/ காந்தி சிலை அருகில் அடிக்கடி விபத்து வேகத்தடை அமைக்க வலியுறுத்தல் காந்தி சிலை அருகில் அடிக்கடி விபத்து வேகத்தடை அமைக்க வலியுறுத்தல்
காந்தி சிலை அருகில் அடிக்கடி விபத்து வேகத்தடை அமைக்க வலியுறுத்தல்
காந்தி சிலை அருகில் அடிக்கடி விபத்து வேகத்தடை அமைக்க வலியுறுத்தல்
காந்தி சிலை அருகில் அடிக்கடி விபத்து வேகத்தடை அமைக்க வலியுறுத்தல்
ADDED : ஜூன் 29, 2024 02:28 AM
குளித்தலை: குளித்தலை பஸ் ஸ்டாண்டு அருகில் காந்தி சிலை உள்ளது. திருச்சி மார்க்கம் மற்றும் கரூர், மணப்பாறை, தரகம்பட்டி மார்க்கத்தில் இருந்து பஸ் ஸ்டாண்டு வரும் அனைத்து பஸ்களும் காந்தி சிலையை சுற்றி வருகிறது.
இதில் நகர பகுதியில் இருந்து நெடுஞ்சாலைக்கு செல்லும் கார், பைக்குகள் வரும் போது திருச்சி மார்க்கத்தில் இருந்து வரும் பஸ்கள் அதிவேகமாக வருகிறது. இதனால் விபத்துகள் ஏற்படுகிறது. மேலும், கரூர் மார்க்கத்தில் இருந்து வரும் பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்படுகிறது.
இந்த இரண்டு இடத்தில் விபத்துக்களை தடுப்பதற்காக வேகத்தடை அமைக்கப்பட்டு இருந்தது.
நகராட்சி சார்பில் தார்ச்சாலை அமைக்கும் போது, வேகத்தடை
களை அகற்றி விட்டனர். இதனால், காந்திசிலை அருகில் தினந்தோறும் விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது.
விபத்தினை தடுக்க, அகற்றப்பட்ட இரண்டு இடத்தில் வேகத்தடை அமைத்து பொது மக்கள்
பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என, பொது மக்கள் கோரிக்கை
விடுத்துள்ளனர்.