/உள்ளூர் செய்திகள்/கரூர்/கரூரில் சைக்கிள் போட்டி 143 மாணவ, மாணவியர் பங்கேற்புகரூரில் சைக்கிள் போட்டி 143 மாணவ, மாணவியர் பங்கேற்பு
கரூரில் சைக்கிள் போட்டி 143 மாணவ, மாணவியர் பங்கேற்பு
கரூரில் சைக்கிள் போட்டி 143 மாணவ, மாணவியர் பங்கேற்பு
கரூரில் சைக்கிள் போட்டி 143 மாணவ, மாணவியர் பங்கேற்பு
ADDED : செப் 28, 2025 08:40 AM
கரூர் : கரூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடந்த சைக்கிள் போட்டியில், 143 மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.
கரூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில், முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பிறந்தநாளை முன்னிட்டு, சைக்கிள் போட்டி நேற்று நடந்தது. கலெக்டர் தங்கவேல் தொடங்கி வைத்தார்.
பின், அவர் கூறியதாவது: மூன்று பிரிவுகளில் மாணவர், மாணவியருக்கான போட்டி நடந்தது. 13 வயதிற்குட்பட்ட மாணவியர்,- 10 கி.மீ., துாரம், 13 வயதிற்குட்பட்ட மாணவர்கள், 15 கி.மீ., 17 வயதிற்குட்பட்ட மாணவியர்,- 15 கி.மீ., 17 வயதிற்குட்பட்ட மாணவர்கள்,- 20 கி.மீ., துாரம் என போட்டி நடத்தப்பட்டது. 86 மாணவர்கள், 57 மாணவியர் என மொத்தம், 143 பேர் கலந்து கொண்டனர். முதலிடம் பெற்ற ஆறு பேருக்கு தலா, -5,000 ரூபாய், இரண்டாமிடம் பெற்றவர்களுக்கு தலா, 3,000 ரூபாய், மூன்றாமிடம் பெற்றவர்களுக்கு தலா, 2,000 ரூபாய், நான்காமிடம் முதல் பத்தாமிடம் வரை தலா, 250 ரூபாய் வங்கி கணக்கில் செலுத்தப்படுகிறது.இவ்வாறு கூறினார்.
மாவட்ட தடகள சங்க செயலர் பெருமாள், மாவட்ட விளையாட்டு அலுவலர் குணசேகரன், தடகள பயிற்றுனர் சபரிநாதன் உள்பட பலர் பங்கேற்றனர்.


